அம்போலி புதர் தவளை
அம்போலி புதர் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | இராக்கோபோரிடே
|
பேரினம்: | சூடோபிலாட்டசு
|
இனம்: | சூ. அம்போலி
|
இருசொற் பெயரீடு | |
சூடோபிலாட்டசு அம்போலி (பிஜூ & போசுயத், 2009)[2] | |
வேறு பெயர்கள் | |
பிலாட்டசு அம்போலி பிஜூ & போசுயத், 2009[3] |
அம்போலி புதர் தவளை எனப் பொதுப் பெயரில் அழைக்கப்படும் சூடோபிலாட்டசு அம்போலி (Pseudophilautus amboli) மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் ஓர் அரிய வகைப் புதர் தவளை சிற்றினம் ஆகும். இது அம்போலியிலும் (மகாராட்டிராவில் உள்ள அம்பா வகை வட்டாரம்), அம்பா மற்றும் கருநாடகா கோட்டை பாறை, லோண்டா, ஜோக் நீர்வீழ்ச்சி-மவிங்குண்டி மற்றும் குத்ரேமுக்-மல்லேசுவரம் ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
விளக்கம்
தொகுஅம்போலி புதர் தவளை ஒரு சிறிய தவளை வகையாகும். இருப்பினும் இதன் உறவினர்களிடையே இது நடுத்தர அளவு முதல் பெரியது வரை உள்ளது. இந்தச் சிற்றினத்தின் நீளம் ஆண் தவளைகளில் 34 mm (1.3 அங்) பெண் தவளைகளில் 37.5 mm (1.48 அங்) ஆகும். ஆண் தவளைகள் பெரிய மற்றும் வெளிப்படையான குரல் பையினைக் கொண்டுள்ளது. இதனை ஓசை எழுப்பும் போது காணலாம். உடல் சற்று வலுவாக உள்ளது. விரல் நுனிகளின் வட்டுகள் மிகவும் விரிவடைந்து காணப்படும். செவிப்பறை அடர் பழுப்பு நிறத்தில் உள்ளது. தோள்பட்டை சீரான கரும் பழுப்பு நிறத்தில் உள்ளது. நுண்ணிய கரும் புள்ளிகளுடன் தொண்டை எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
வாழ்விடம்
தொகுஅம்போலியில் இது பசுமையான வனப்பகுதிகளுக்கு அருகில் மிகவும் தொந்தரவு செய்யப்பட்ட பகுதிகளில் காணப்படுகிறது. இருப்பினும் இது முதன்மையாகப் பசுமையான காடுகளில் வாழ்கின்றதா இல்லையா என்பது தெரியவில்லை. இது நேரடி வளர்ச்சியின் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது .
அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
தொகுநகரமயமாக்கல் மற்றும் சுற்றுலா வளர்ச்சி காரணமாக வாழிட இழப்பு மற்றும் வாழிடத் துண்டாக்கம் இந்த இனங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இது எந்தவொரு பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும் காணப்படுவதாகத் தெரியவில்லை. இதனால் வாழிடப் பாதுகாப்பு அவசர முன்னுரிமையில் உள்ளது.
படங்கள்
தொகு-
அம்போலி புதர் தவளை
-
இனச்சேர்க்கை அழைப்புகளுக்கான விரிவடைந்த குரல் பையுடன்
-
கலவியின் போது
மேற்கோள்கள்
தொகு- ↑ S.D. Biju (2004). "Pseudophilautus amboli". IUCN Red List of Threatened Species 2004: e.T58910A11854647. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58910A11854647.en. https://www.iucnredlist.org/species/58910/11854647. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ Frost, Darrel R. (2013). "Pseudophilautus amboli (Biju and Bossuyt, 2009)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 31 July 2013.
- ↑ Biju, S. D.; Bossuyt, F. (2009). "Systematics and phylogeny of Philautus Gistel, 1848 (Anura, Rhacophoridae) in the Western Ghats of India, with descriptions of 12 new species". Zoological Journal of the Linnean Society 155 (2): 374–444. doi:10.1111/j.1096-3642.2008.00466.x.