அம்மை தடுப்பூசி

அம்மை தடுப்பூசி (Measles vaccine) என்பது அம்மை நோய் தடுப்புக்கான ஊசி [1] ஒரு தடுப்பூசி மருந்தளவுக்குப் பிறகு ஒன்பது மாதங்கள் வயதுள்ள 85 விழுக்காடு குழந்தைகளுக்கும், ஒரு வயதுள்ள 95 விழுக்காடு குழந்தைகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகிறது[2] ஒரு மருந்தளவு தடுப்பூசிக்கு பிறகும் எதிர்ப்பு சக்தி உருவாகாத பெரும்பாலோருக்கும் இரண்டாவது மருந்தளவு தடுப்பூசிக்கு பிறகு நோய் தடுப்பு சக்தி உருவாகிறது. மக்கள் தொகையில் 93 விழுக்காடுக்கும் அதிகமான நபர்களுக்கு அம்மை தடுப்பூசி போடப்பட்டிருந்தால் அங்கு அம்மை நோய் தாக்கம் பொதுவாக ஏற்படுவதில்லை; ஆனால் தடுப்பூசி விகிதம் குறைந்தால் மீண்டும் நோய் தாக்கம் ஏற்படலாம். தடுப்பூசியின் பலாபலன் நீண்ட வருடங்களுக்கு நீடிக்கும். தடுப்பூசியின் பலன் காலபோக்கில் குறையுமா என்பது குறித்து தெளிவு இல்லை. அம்மை நோய்க்கு ஆட்பட்ட ஓரிரு நாட்களிலயே தடுப்பூசி போடப்பட்டால் நோய் பாதிப்பிலிருந்து கூட விடுபடலாம். [1]

அம்மை தடுப்பூசி
Vaccine description
Target disease Measles
வகை Attenuated virus
மருத்துவத் தரவு
மெட்லைன் ப்ளஸ் a601176
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
ATC குறியீடு J07BD01
ChemSpider NA N

பாதுகாப்பு

தொகு

எச் ஐ வி தொற்று இருப்பவர்களுக்கும் கூட பொதுவாக இந்த தடுப்பூசி பாதுகாப்பானது. வழக்கமாக பக்கவிளைவுகள் மிதமானதாகவும் மற்றும் குறைந்த காலத்துக்கு மட்டுமே இருக்கும். தடுப்பூசி போட்ட இடத்தில் மிதமான வலியும் காய்ச்சலும் இருக்கலாம் ஆயிரம் நபர்களில் ஒரு நபருக்கு கடும் ஒவ்வாமை ஏற்படுகிறது என ஆவணபடுத்தப்பட்டுள்ளது. கடுமையான ஓரம்சார்ந்த நரம்பு சீர்குலைவு நோய்க்குறி , மதியிறுக்கம் மற்றும் குடல் அழற்சி நோய் அதிகமாவதாக தெரியவில்லை.[1]

உருவாக்கம்

தொகு

இந்த தடுப்பூசி தனியாகவோ அல்லது மணல்வாரி தடுப்பூசி, பொன்னுக்குவீங்கி தடுப்பூசி, மற்றும் தட்டம்மை தடுப்பூசி எம் எம் ஆர் தடுப்பூசி மற்றும் எம் எம் ஆர் வி தடுப்பூசி போன்ற தடுப்பூசிகளுடன் இணைந்தோ கிடைக்கிறது . அனைத்து விதமான உருவாக்கத்திலும் இந்த தடுப்பூசி நன்றாக செயல்படுகிறது. இந்த நோய் பரவலாக காணப்படும் இடங்களில் ஒன்பது மாத குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போட உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்கிறது. இந்த நோய் அதிகமாக காணப்படாத இடங்களில் 12 மாத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது பொருத்தமாக இருக்கும். இது ஒரு உயிருள்ள தடுப்பூசி. இது உலர்ந்த பொடியாக வருகிறது. கலந்த பிறகு சருமத்தின் கீழோ அல்லது தசையிலோ ஊசி மூலம் உள்செலுத்த வேண்டும். எந்த அளவுக்கு தடுப்பூசி பயனுள்ளதாக இருந்தது என தெரிந்துகொள்ள இரத்த பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.[1]

வரலாறு, சமூகம் மற்றும் கலாசாரம்

தொகு

2013 ஆம் ஆண்டு கணக்குப்படி உலகம் முழுதும் சுமார் 85 % குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடபட்டுள்ளது. [3] 2008 ஆம் ஆண்டு குறைந்தபட்சம் 192 நாடுகள் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்டன. [1] 1963 ஆம் ஆண்டு இந்த தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தபட்டது.[2] மணல்வாரி-அம்மை-பொன்னுக்குவீங்கி மூன்றுக்குமான இணைந்த தடுப்பூசி முதன் முதலில் 1971 ஆம் ஆண்டிலிருந்து கிடைக்க ஆரம்பித்தது.[4] இந்த மூன்று தடுப்பூசிகளுடன் சின்னம்மை தடுப்பூசியும் சேர்த்து 2005 முதல் எம் எம் ஆர் வி தடுப்பூசி என்ற பெயரில் கிடைக்க தொடங்கியது.[5] இந்த தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசிய மருந்து பட்டியலில் சேர்க்கபட்டுள்ளது. அடிப்படை மருத்துவ அமைப்புகளில் இது ஒரு முக்கியமான மருந்து. [6] இந்த தடுப்பூசி விலைமிகுந்ததுமல்ல. [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Measles vaccines: WHO position paper.". Weekly epidemiological record 84 (35): 349–60. 28 August 2009. பப்மெட்:19714924. http://www.who.int/wer/2009/wer8435.pdf. 
  2. 2.0 2.1 Control, Centers for Disease; Prevention (2014). CDC health information for international travel 2014 the yellow book. p. 250. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199948505.
  3. "Measles Fact sheet °286". who.int. November 2014. பார்க்கப்பட்ட நாள் 4 February 2015.
  4. "Vaccine Timeline". பார்க்கப்பட்ட நாள் 10 February 2015.
  5. Mitchell, Deborah (2013). The essential guide to children's vaccines. New York: St. Martin's Press. p. 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781466827509.
  6. "WHO Model List of EssentialMedicines" (PDF). World Health Organization. October 2013. பார்க்கப்பட்ட நாள் 22 April 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மை_தடுப்பூசி&oldid=3050036" இலிருந்து மீள்விக்கப்பட்டது