அயனியாக்கம் (ionization) அல்லது அயனாக்கம் என்பது அணு அல்லது மூலக்கூறு ஒன்று ஏற்றம் ஒன்றைப் பெறுவதன் மூலம் அல்லது இழப்பதன் மூலம் அயனி நிலைக்கு மாறும் இயற்பியல் செயற்பாடு ஆகும். இங்கு ஏற்றம் பெற்ற அணு அல்லது மூலக்கூறு அயனி எனப்படும்.