அயன் டோம்
அயன் டோம் (Iron Dome) (எபிரேயம்: כִּיפַּת בַּרְזֶל) என்பது ரபாயல் உயர் பாதுகாப்பு முறைகள் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட,[1] எல்லா காலநிலைக்கும் ஏற்ற கொண்டு செல்லக்கூடிய வான் பாதுகாப்பு முறையாகும்.[2] இது சனநெருக்கடியான இடத்திற்கு 4 முதல் 70 கி.மீட்டர் தூரத்திலிருந்து சுடப்பட்ட குறுகிய தூர ஏவுகணை, எறிகணை ஆகியவற்றை அதன் எறிபாதையில் இடைமறிக்க வடிவமைக்கப்பட்டது.[3][4] இம்முறை இசுரேலின் வடக்கு, தெற்கு எல்லையிலிருந்து வரும் ஏவுகணை அச்சுறுத்தல்களை முறியடிக்க முதலில் உருவாக்கப்பட்ட ரபாயலின் ஸ்பைடர் முறை நுட்பத்திலிருந்து உருவாக்கப்பட்டது.
அயன் டோம் Iron Dome | |
---|---|
"அயன் டோம்" செலுத்திகள் இசுரேலின் ஸ்டெரோட்டுக்கு அடுகில் வைக்கப்பட்டுள்ளது (சூன் 2011) | |
வகை | ஊந்துனை, பீரங்கி, சிறு பீரங்கி எதிர்ப்பு |
அமைக்கப்பட்ட நாடு | இசுரேல் |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 2011–தற்போது |
பயன் படுத்தியவர் | இசுரேல் |
போர்கள் | காசா-இசுரேல் முரண்பாடு (இசுரேல் மீதான பலஸ்தீன ஊந்துகனைத் தாக்குதல்கள் - 2011, 2012) |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | ரபாயல் உயர் பாதுகாப்பு முறைகள் |
வடிவமைப்பு | 2005–தற்போது |
தயாரிப்பாளர் | ரபாயல் உயர் பாதுகாப்பு முறைகள் |
ஓரலகுக்கான செலவு | ஒரு ஏவுகணைக்கு US$40,000 ஒரு தொகுதிக்கு US$50 மில்லியன் |
உருவாக்கியது | 2011–தற்போது |
அளவீடுகள் | |
எடை | 90 kg (200 lb)[1] |
நீளம் | 3 m (9.8 அடி)[1] |
விட்டம் | 160 mm (6.3 அங்)[1] |
வெடிப்புத் தூண்டல் முறை | அண்மை உருகிகள்[2] |
ஏவு தளம் | மூன்று செலுத்திகள், ஒவ்வொன்றும் 20 இடைமறிப்புகளைக் கொண்டிருக்கும்.[1] |
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Ben-David, Alon (18 March 2008). "Iron Dome advances to meet Qassam threat". Jane's. http://www.janes.com/products/janes/defence-security-report.aspx?ID=1065927116&pu=1&rd=janes_com#. பார்த்த நாள்: 18 August 2011.
- ↑ 2.0 2.1 "Iron Dome Air Defense Missile System, Israel". army-technology.com. பார்க்கப்பட்ட நாள் 18 ஆகத்து 2011.
- ↑ இஸ்ரேலின் Iron Dome: காசா ஏவும் ராக்கெட்டுகளை அழிக்கும் பிரம்மாஸ்திரம்
- ↑ Sharp, Jeremy M. (16 September 2010). "U.S. Foreign Aid to Israel" (PDF). Congressional Research Service. பார்க்கப்பட்ட நாள் 18 ஆகத்து 2011.