அயம்

அயம் என்பது கொரியாவில், யோசியன் காலத்தில் (1392 – 1910), குளிர்காலத்தில் அணியப்பட்ட பாரம்பரியத் தொப்பி. குளிரில் இருந்து காத்துக் கொள்வதற்காகப் பெண்களே இதனைப் பெரிதும் அணிந்தனர். இதற்கு ஏஜியம் என இன்னொரு பெயரும் உண்டு. ஏஜியம் என்னும் சொல் கொரிய மொழியில் நெற்றியை மூடுதல் எனப் பொருள்படும். யோசன் காலத்தின் முற்பகுதியில், இசெயோ எனப்படும் கீழ்நிலைப் பணியாளர்கள் இதனை அணிந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. எனினும், அக்காலத்தில் இத்தொப்பியின் வடிவம் பிற்காலத்து வடிவத்தை ஒத்திருந்ததா என்று தெரியவில்லை. யோசன் காலப் பிற்பகுதியில், பொது மக்களிடையே பெண்கள் இதனை அணிந்தனர். சிறப்பாகக் கொரியாவின் மேற்குப் பகுதியில், கிசாயெங் எனப்படும் கேளிக்கைப் பெண்கள் அயம் தொப்பிகளைப் பயன்படுத்தினர்.

நவீன அயம்
Hangul 아얌 / 액엄
Hanja none /
Revised Romanization ayam /aegeom
McCune–Reischauer ayam / aekŏm

இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அயம்&oldid=822432" இருந்து மீள்விக்கப்பட்டது