அயர்டன் சென்னா
அயர்டன் சென்னா (Ayrton Senna பிரேசிலிய போர்த்துக்கீசம்: [aˈiʁtõ ˈsẽnɐ dɐ ˈsiwvɐ] ( கேட்க); மார்ச்-21, 1960 - மே-1, 1994) என்பவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த கார்பந்தய வீரராவார். இவர் பார்முலா 1 போட்டித்தொடரை 1988, 1990 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் "மெக்லாரன்" அணிக்காக வென்றுள்ளார். பார்முலா 1 போட்டித்தொடர் வரலாற்றின் பெருவெற்றியாளர்களில் இவர் முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.[1][2][3] வில்லியம்சு அணிக்காக பங்கேற்ற 1994ஆம் ஆண்டு "சான் மரினோ கிராண்ட் ப்ரீ" போட்டியில் நிகழ்ந்த விபத்தில் காலமானார்.[4]
பிறப்பு | 21 மார்ச்சு 1960 |
---|---|
இறப்பு | 1 மே 1994 | (அகவை 34)
பார்முலா ஒன் உலக போட்டித்தொடர் வாழ்வழி | |
நாடு | Brazilian |
செயல்படும் ஆண்டுகள் | 1984–1994 |
அணிகள் | டோல்மேன், டீம் லோட்டஸ், மெக்லாரன், வில்லியம்ஸ் |
பந்தயங்கள் | 162 (161 starts) |
பெருவெற்றிகள் | 3 (1988, 1990, 1991) |
வெற்றிகள் | 41 |
உயர்மேடை முடிவுகள் | 80 |
மொத்த புள்ளிகள் | 610 (614) |
துருவநிலை தொடக்கங்கள் | 65 |
அதிவேக சுற்றுகள் | 19 |
முதல் பந்தயம் | 1984 Brazilian Grand Prix |
முதல் வெற்றி | 1985 Portuguese Grand Prix |
கடைசி வெற்றி | 1993 Australian Grand Prix |
கடைசி பந்தயம் | 1994 San Marino Grand Prix |
பல்வேறு கார்பந்தய வாக்கெடுப்புகளில் மிகச் சிறந்த மற்றும் மிகவும் செல்வாக்கான பார்முலா 1 கார்பந்தய வீரராக அயர்டன் சென்னா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.[5][6][7][8] இவர் போட்டிக்குத் தகுதிபெறும் ஒற்றைச் சுற்றில் கார் ஓட்டும் வேகத்தில் சிறந்தவராவார், 1988 முதல் 2006ஆம் ஆண்டுவரை அதிகமுறை பார்முலா 1 போட்டியை முதல் இடத்தில் இருந்து துவக்குதலில் சாதனையை வைத்திருந்தார். மேலும் இவரது மழைக்கால போட்டியோட்டத்துக்காகவும் சிறப்பான முக்கியத்துவம் பெறுகிறார், அவற்றுள் சில: 1984 மொனாகோ கிராண்ட் ப்ரீ, 1985 போர்த்துக்கீசிய கிராண்ட் ப்ரீ மற்றும் 1993 ஐரோப்பிய கிராண்ட் ப்ரீ. "மொனாகோ கிராண்ட் ப்ரீ" போட்டியில் ஆறுமுறை வென்று சாதனைபுரிந்துள்ளார். வரலாற்றில் அதிக போட்டிகள் வென்ற பார்முலா 1 வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
மேலும் பார்க்க
தொகுஉசாத்துணைகள்
தொகு- ↑ "Alonso, Massa, Schumacher say Senna is "greatest" on Top Gear".
- ↑ "Murray Walker lists Senna as number one". http://www.bbc.co.uk/sport/0/formula1/20324109.
- ↑ "Ayrton Senna: Brazilian takes his place among our 10 best F1 drivers".
- ↑ "Obituary: Ayrton Senna". 2 May 1994.
- ↑ "Formula 1's Greatest Drivers – AUTOSPORT.com – Ayrton Senna". F1greatestdrivers.autosport.com. http://f1greatestdrivers.autosport.com/?driver=1. பார்த்த நாள்: 4 January 2013.
- ↑ "Drivers vote Senna the greatest ever – F1 news". Autosport.Com. 10 December 2009. http://www.autosport.com/news/report.php/id/80517. பார்த்த நாள்: 4 January 2013.
- ↑ "Alonso voted best driver". Sify.com. 23 July 2010. பார்க்கப்பட்ட நாள் 1 May 2014.
- ↑ talent, Formula (20 November 2012). "Formula 1's greatest drivers. Number 1: Ayrton Senna". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 22 November 2012.