அயிருகைட்டு

ஆர்சனேட்டு கனிமம்

அயிருகைட்டு (Aerugite) என்பது Ni9(AsO4)2AsO6. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரியவகை கனிமச் சேர்மமாகும். நிக்கல் ஆர்சனேட்டு அணைவுக் கனிமமாக இதை வகைப்படுத்துகிறார்கள். பச்சை, அடர்நீலப் பச்சை நிறங்களில் முக்கோணப் படிகங்களாக இக்கனிமம் உருவாகிறது. 4 என்ற மோவின் கடினத்தன்மையும் 5.85 முதல் 5.95 என்ற ஒப்படர்த்தியும் அயிருகைட்டு கனிமத்தின் இயற்பியல் பண்புகளாகும்.

அயிருகைட்டு
Aerugite
பொதுவானாவை
வகைஆர்சனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுNi9(AsO4)2AsO6
இனங்காணல்
நிறம்புல் பச்சை, நீலப்பச்சை
படிக இயல்புபடிக மேலோடு முதல் படிகப்பொதிகள்
படிக அமைப்புமுக்கோணம்
மோவின் அளவுகோல் வலிமை4
மிளிர்வுஅடமண்டைன்
கீற்றுவண்ணம்இளம் பச்சை, பசுமை கலந்த வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது, ஒளிகசியும்
ஒப்படர்த்தி5.85 - 5.95
மேற்கோள்கள்[1][2][3]
அயிருகைட்டு

1858 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் கோர்ன்வால், அல்லது செருமனியின் சாக்சனி மாநிலத்திலுள்ள எர்செக்பீர்க் மலைத்தொடர் ஆகிய இடங்களிலுள்ள சுரங்கத்தில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கனிமம் தோன்றிய இடம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. தாதுக்கள் வறுத்தெடுக்கும் உலை சுவர்களில் ஒரு செதில் பட்டையாக காணப்படுவது மிகப்பொதுவான தோற்றமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தாமிரத் துரு என்ற பொருள் கொண்ட அயிருகோ என்ற இலத்தீன் சொல்லில் இருந்து இக்கனிமத்தின் பெயர் வருவிக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு கனிமவியலாளர் சங்கம் அயிருகைட்டு கனிமத்தை Aru[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Mindat.org Aerugite page
  2. Webmineral Aerugite page
  3. http://rruff.geo.arizona.edu/doclib/hom/aerugite.pdf Handbook of Mineralogy
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயிருகைட்டு&oldid=4128550" இலிருந்து மீள்விக்கப்பட்டது