அய்கினைட்டு

சல்போவுப்பு கனிமம்

அய்கினைட்டு (Aikinite) என்பது PbCuBiS3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். ஈயம் தாமிரம் பிசுமத் ஆகிய தனிமங்களின் சல்பைடு கனிமம் அல்கினைட்டு எனக் கருதப்படுகிறது. கருப்பும் சாம்பலும் அல்லது செம்பழுப்பு நிறத்தில் நேர்சாய்சதுர ஊசிப்படிகங்களாக இக்கனிமம் படிகமாகிறது. மோவின் அளவுகோலில் இதன் கடினத்தன்மை மதிப்பு 2 முதல் 2.5 என்றும் அய்கினைட்டின் ஒப்படர்த்தி 6.1 முதல் 6.8 என்றும் அளவிடப்பட்டுள்ளது. 1843 ஆம் ஆண்டு யூரல் மலையில் உள்ள பெரியோசோவ்சுகோயா படிவுகளில் இக்கனிமம் கண்டறியப்பட்டது. ஆங்கிலேய நிலவியளாலர் ஆர்தர் அய்கின் (1773-1854) நினைவாக கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

அய்கினைட்டு
Aikinite
பொதுவானாவை
வகைசல்பைடு கனிமம்
வேதி வாய்பாடுPbCuBiS3
இனங்காணல்
மோலார் நிறை575.92 கி/மோல்
நிறம்சாம்பல் கருப்பு, செம்பழுப்பு
படிக இயல்புஊசிப்படிகங்கள், பொதிகள்
படிக அமைப்புநேர்சாய்சதுரம்
பிளப்பு{010} தெளிவில்லாத பிளவு
மோவின் அளவுகோல் வலிமை2-2.5
மிளிர்வுஉலோகப்பளபளப்பு
கீற்றுவண்ணம்சாம்பல் கருப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி6.1–6.8, சராசரி = 6.44
பிற சிறப்பியல்புகள்கதிரியக்கப் பண்பில்லை
மேற்கோள்கள்[1][2]

மேற்கு டாசுமேனியாவின் துந்தாசு சுரங்கத்தில் அய்கினைட்டு கனிமம் கிடைக்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Aikinite. Webmineral
  2. Aikinite. Mindat.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்கினைட்டு&oldid=2808415" இலிருந்து மீள்விக்கப்பட்டது