அய்யப்பன் தீயாட்டு

அய்யப்பன் தீயாட்டு என்பது பகவதி தீயாட்டிற்கு நிகரான கேரளக் கலையாகும். அய்யப்பன் கோயில்களில், பிராமண ஆலயங்களிலும், நம்பியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் நிகழ்த்துவர். அய்யப்பனின் அவதார வடிவங்களை தீயாட்டில் காட்டுவர். ஐந்தடி, மூன்றடி தொடங்கி, மேளத்திலுள்ள தாளங்களை இசைப்பர். வெள்ளக்கோடி முண்டாசு கொண்டு, அதன் முகப்பில் பட்டு சுற்றி, நெற்றிமேல் சந்தனமும் குங்குமமும் பூசி, கழுத்தில் துளசிமாலைகளும் அணிந்து தீயாட்டு நிகழ்த்துவர். கதை கூறி முடிந்ததும், கணிகேஸ்வரன் என்னும் வேடம் இட்டு கூத்து நடத்துவர். இதைப் பற்றிய செய்திகள் கேரளோல்ப்பத்தியில் கிடைக்கின்றன. தெய்வ ஆட்டம் என்பது தெய்யாட்டம் என்றும் பின்னர் தீயாட்டு என்றும் மருவியதாகக் கருதுகிறார்கள்.

சான்றுகள் தொகு

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யப்பன்_தீயாட்டு&oldid=1606731" இருந்து மீள்விக்கப்பட்டது