அரங்கநாயகி

அரங்கநாயகி (ஆங்கிலம்: Ranganayaki, சமஸ்கிருதம்: रङ्गनायकी, romanized: Raṅganāyakī, பொருள்: 'ரங்கநாதரின் மனைவி'), ஒரு இந்து தெய்வம் ஆவார். தாயார் என்று அடைமொழியிட்டு அழைக்கப்படும் இவர்,[1] ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலின் முதன்மையான பெண் தெய்வம் ஆவார்.[2] அவள் ஸ்ரீரங்கத்தின் வழிபாட்டு தெய்வமும் விஷ்ணுவின் அவதாரமுமான ரங்கநாதரின் மனைவி. லட்சுமியின் அவதாரமான இவரை ரங்கநாயகி நாச்சியார் என்றும் பெரிய பிராட்டி என்றும் அழைப்பர்.[3]

அரங்கநாயகி
அரங்கநாயகி தாயார் மூர்த்தி
அதிபதிஸ்ரீரங்கத்துக் பெண் கடவுள்
வகைவைணவம்
இடம்வைகுண்டம்
துணைஅரங்கநாதர்
நூல்கள்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
விழாக்கள்வைகுண்ட ஏகாதசி

ரங்கநாயகி ஸ்ரீரங்கத்து மக்களாலும், வைணவர்களாலும் பெரிதும் போற்றப்படும் தெய்வமாவார். ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தின்படி இவர் அரங்கநாதருக்கு இணையாகக் கருதப்படுகிறார். தெய்வீக தம்பதியினரை வழிபடுவதற்கான வழிமுறைகளின் முதலும் முடிவுமாகக் கருதப்படுபவர்.

மேற்கோள் தரவுகள் தொகு

  1. Raman, K. V. (2003) (in en). Sri Varadarajaswami Temple, Kanchi: A Study of Its History, Art and Architecture. Abhinav Publications. பக். 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7017-026-6. https://books.google.com/books?id=myK8ZYEIu4YC&dq=t%C4%81y%C4%81r+tamil&pg=PA8. 
  2. Hawley, John Stratton; Wulff, Donna Marie (1998) (in en). Devī: Goddesses of India. Motilal Banarsidass Publ.. பக். xii. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-1491-2. https://books.google.com/books?id=CZrV3kOpMt0C&dq=ranganayaki+goddess&pg=PP16. 
  3. Kumar, P. Pratap (1997) (in en). The Goddess Lakṣmī: The Divine Consort in South Indian Vaiṣṇava Tradition. Scholars Press. பக். 81. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7885-0199-9. https://books.google.com/books?id=ejpCrALI_hsC&dq=ranganayaki+goddess&pg=PA81. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரங்கநாயகி&oldid=3867190" இலிருந்து மீள்விக்கப்பட்டது