அரசம்மன் கோயில்

[1]அரசம்மன் என்கிற அரசாத்தாள் திருக்கோயில் தமிழ்நாடு, கோயமுத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியம், கள்ளப்பாளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த திருக்கோயில் ஆகும்.

கோயில் அமைப்பு

தொகு

அருள்மிகுஅரசம்மன் ஆலயத்தில் கிழக்கு நோக்கி அம்மன் தனி சன்னதி அமைந்துள்ளது. சன்னதியின் பின்புறம் தென்மேற்கு முலையில் சப்த கன்னியர்கள்காட்சியளிக்கின்றனர் சன்னதி முன்பாக நந்தியும் தீபஸ்தம்பம் அமைந்துள்ளது

வழிபாடுகள்

தொகு

ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் திருமணம், குழந்தைபேறு ஆகிய வற்றிக்க மாவிளக்கு ஏற்றுதல், புடவை சாற்றுதல்,போன்ற வழிபாடுகள் செய்து வருகின்றனர். பௌர்ணமி மற்றும் அமாவாசை போன்ற நாட்களில் அபிஷேக அலங்காரம், பொங்கல் வழிபாடு நடைபெறுகிறது. நாள்தோறும் சிறப்பு பூசைகளும், அலங்காரமும் நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு பால், தயிர், இளநீர் போன்றவை அபிஷேகத்திற்கும், பூக்கள் அம்மன் அலங்காரத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது

தீபஸ்தம்பம்

தொகு

இத்திருக்கோயிலின் தீபஸ்தம்பம் சிறப்பு வாய்ந்தது. இத்தீபஸ்தம்பத்திற்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு என்று கூறப்படுகின்றது

திருவிழாக்கள்

தொகு

ஆடித்திருவிழா

தொகு

ஆலயத்தில் ஆடி உற்சவத்திருவிழா வருடாந்தோறும் சிறப்பாக நடந்துவருகிறது. இந்நாளில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிகின்றனர் அன்று பொது பொங்கல் வழிபாடு நடத்தப்படுகிறது.

முக்கியமாக முன்று ஆண்டின்றிக்கு ஒரு முறை ஆடி மாதம் அம்மனுக்கு கல்யாணம் உற்சவம் நடைபெற்றுவருகிறது .

கார்த்திகை திருநாள்

தொகு

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு செய்து அம்மன் திருக்கோவில் வலம் வந்து தீபமேற்றி முன்னோர்கள் நினைவாக வழிபடுகின்றனர். அன்று தங்கள் இல்லங்களில் ஆண்டு முழுவதும் உண்டியலில் சேர்த்து வைத்த காணிக்கையை அம்மனுக்கு செலுத்தி அருள் பெறுவர்

மார்கழி உற்சவம்

தொகு

மார்கழி மாதம் நாள்தோறும் சிறப்பு பூசைகளும், அலங்காரமும்நடைபெற்றுவருகிறது.

அருகிலுள்ள பழமையான கோவில்கள்

தொகு

அருள்மிகு கருமியம்மன் கோவில்

அருள்மிகு ஐய்யாசாமி கோவில்

அருள்மிகு மாகாளியம்மன் கோவில்

ஸ்ரீ ஜயஸ்வர்ய கிருஷ்ணர் கோவில்

  1. "கொங்கு கோனார் (இடையர், யாதவர்) குலம்(கூட்டம்)".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசம்மன்_கோயில்&oldid=3614385" இலிருந்து மீள்விக்கப்பட்டது