அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி, தாளவாடி
அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி, தாளவாடி என்பது தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், தாளவாடியில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும்.[1] இது 2022 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கலூரியில் 2024 ஆண்டு நிலவரப்படி 210 மாணவ மாணவியர் பயில்கின்றனர். இக்கல்லூரி பெரியார் பல்கலைக்கழ இணைவுக் கல்லூரியாகும்.[2]
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 2022 |
சார்பு | பெரியார் பல்கலைக்கழகம் |
முதல்வர் | முத்துக்குமார் (பொறுப்பு) |
அமைவிடம் | , , |
வளாகம் | ஊரகம் |
கல்லூரி வரலாறு
தொகுதாளவாடி மலைப் பகுதியில் உள்ள மக்கள் மேற்படிப்புக்காக 80 கி.மீ தொலைவில் உள்ள சத்தியமங்கலம், கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு ஆகிய நகரங்களுக்கு சென்று வரவேண்டிய நிலை இருந்தது. இதனால் இப்பகுதியில் அரசு கலைக் கல்லூரி துவக்கவேண்டும் என்ற கோரிக்கை இருந்துவந்தது. இந்நிலையில் தாளவாடியில் அரசு கலைக்கல்லூரி துவக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் 2001 ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறவித்தார். இந்த அறிவிப்பு அடுத்த ஆண்டே நடைமுறைக்கு வந்தது. அதன்படி தாளவாடி அருகே உள்ள திகினாரை அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறைகளில் ஐந்து பாடப் பிரிவுகளுடன் கல்லூரி துவக்கப்பட்டது. கல்லூரிக்கு கல்லூரி முதல்வர், நூலகர், உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட 17 பேராசிரியர் பணியிடங்களும், ஆசிரியர் அல்லாத 17 பணி இடங்களும் உருவாக்கபட்டன.
இதனையடுத்து தாளவாடியை அடுத்துள்ள பாரதி புரத்தில் 12 கோடி மதிப்பீட்டில் கல்லூரிக்கு புதிய கட்டடங்கள் கட்டபட்டன. இதன் பிறகு 2024 மார்ச் முதல் புதிய கட்டத்தில் கல்லூரி செயல்படத் துவங்கியது.[3]
துறைகள்
தொகு- தமிழ் (இளங்கலை)
- ஆங்கிலம் (இளங்கலை)
- கணிதம் (இளம் அறிவியல்)
- வணிகவியல் (பிகாம்)
- கணினி அறிவியல் (இளம் அறிவியல்)
மேற்கோள்கள்
தொகு- ↑ தினத்தந்தி (2022-07-08). "அந்தியூர், தாளவாடியில் புதிதாக அரசு கலை-அறிவியல் கல்லூரி; காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்".
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ Admin (2023-09-13). "அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளவாடி" (in அமெரிக்க ஆங்கிலம்).
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ "210 மாணவர்களுக்கு மொத்தமே 6 பேராசிரியர்கள்தான் - தாளவாடி அரசு கல்லூரியின் அவலம்" (in ஆங்கிலம்). 2024-09-21.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help)