அரசியலமைப்பு அறநெறி

அரசியலமைப்பு அறம் அல்லது அரசியலமைப்பு அறநெறி (constitutional morality) என்பது ஒரு குடியரசின் அரசியலமைப்பிலுள்ள முக்கியத் தத்துவங்களைப் பின்பற்றி நடத்தல்[1] ஆகும். அத்துடன், ஒரு சமூகத்தின் தனிப்பட்ட நலன்களையும் கூட்டு நலன்களையும் நிறைவேற்றும் வகையில், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய, மக்கள்சார் அரசியல் செயல்முறைகளுக்கான உறுதியளிப்பும் இதில் அடங்கும்[1]. ஒரு மக்களாட்சி அரசு தனியுரிமை, சமவுரிமை, சார்பின்மை, தோழமை ஆகிய மக்களாட்சியின் சீர்மைகளை நிலைநிறுத்துவதுடன் சட்டத்தின்படி ஆட்சி செய்யவும் வேண்டும்[2].

அரசியலமைப்பு அறநெறி குறித்த கருத்துகள் இந்திய அரசியலமைப்பின் தொடக்கப் பகுதியிலும் அடிப்படை உரிமைகள் குறித்த பகுதியிலும் (பகுதி III) அரசின் கொள்கையை வழிகாட்டும் கோட்பாடுகள் குறித்த பகுதியிலும் (பகுதி IV) காணப்படுகின்றன[2].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Shukla, A. Doctrine of Constitutional Morality. National University of Study and Research in Law, Ranchi.
  2. 2.0 2.1 "Constitutional Morality - Indian Polity Notes". prepp.in. பார்க்கப்பட்ட நாள் 21 Jan 2022.

இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள கலைச்சொற்கள்

தொகு

அரசியலமைப்பு அறம்; அரசியலமைப்பு அறநெறி - constitutional morality; மக்கள்சார் - democratic; தனியுரிமை - liberty; சமவுரிமை - equality; சார்பின்மை - justice; தோழமை - fraternity; சட்டத்தின்படி ஆட்சி - rule of law; தொடக்கப் பகுதி - preamble; அரசின் கொள்கையை வழிகாட்டும் கோட்பாடுகள் - directive principles of state policy.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசியலமைப்பு_அறநெறி&oldid=3377155" இலிருந்து மீள்விக்கப்பட்டது