அரசியல் அமைப்புச் சட்டம்

அரசியல் அமைப்புச் சட்டம் (Constitutional Law) என்பது சட்டத்தின் மெய்ச்சேர்கையாகும்.இது ஒரு தேசத்தின் மாறுபட்ட கூறுகளின் தொடர்பினை விளக்குகிறது. குறிப்பாக, ஆட்சியகம், நீதியகம் மற்றும் சட்டமயமாக்ககம் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்புகளை வரையருத்து கூறுவதாக அமையும்.

தற்போது அரசியல் அமைப்பு மதிப்பைக் கொண்டுள்ள மானிடர் மற்றும் குடிமக்களின் உரிமைகளுக்கான பிரெஞ்சு அறிக்கையில் இருந்துள்ள கொள்கைகள்

உலகில் எல்லா நாடுகளும் ஒரு தொகுக்கப் பட்ட அரசியல் அமைப்பு முறைமையைச் சார்ந்திருக்க வில்லை. அப்படிப்பட்ட நாடுகளில் ஆட்சி அமைப்பு சட்டம், பொதுவாக கட்டளைகாகவும், உடன்பாட்டு விதிமுறைகளுமாகவே காணப்படுகின்றன. இதில் வழக்கச் சட்டம், மரபுச் சார் கொள்கைகள், எழுத்துருச் சட்டம், தீர்ப்பர்களால் உறுவாக்கப்படும் சட்டங்கள், அல்லது பன்னாட்டு விதிமுறைகள் மற்றும் கொள்கைகள் உட்படலாம். அரசியல் அமைப்பு சட்டம் முக்கியமாக அரசு தனது அதிகார அமைப்பை பயன்படுத்துவது தொடர்பான அடிப்படை கொள்கைகள் சார்ந்ததாக உள்ளது. சில சந்தர்ப்பங்களில், இந்த கொள்கைகள் அரசிற்கு சிறப்பு அதிகாரங்களை தருவதாக, குறிப்பாக வரிவிதிப்பு, மக்கள் நலனுக்காக செலவிடுதல் போன்ற அதிகாரங்களாக, அமைகிறது. மற்றுள்ள வேளைகளில் அரசியல் அமைப்புக் கொள்கைகள் அரசின் செயல்பாடுகளில் வரம்புகளை ஏற்படுத்துவதாக அமைகிறது. உதாரணமாக ஒரு தனிநபரை காரணம் இல்லாது கைது செய்தல் கூடாது போன்றவை. அமெரிக்க ஒன்றிய நாடுகள் உட்பட பலதேசங்களின் அரசியல் அமைப்பு சட்டம், இத்தேசம் நிலவில் வரும்போதே எழுதப்பட்ட ஆவணமாக அமைந்துள்ளது.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. Blick, Andrew; Blackburn, Robert (2012), Mapping the Path to Codifying - or not Codifying - the UK's Constitution, Series paper 2. Centre for Political and Constitutional Studies, King's College London, Parliament UK, பார்க்கப்பட்ட நாள் 19 November 2016
  2. H Barnett, Constitutional and Administrative Law (5th edn Cavendish 2005) 9, "A written constitution is one contained within a single document or a [finite] series of documents, with or without amendments"
  3. Donald Markwell (2016). Constitutional Conventions and the Headship of State: Australian Experience. Connor Court. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781925501155.