அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கீரமங்கலம்

கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (G.B.H.S.S.KEERAMANGALAM) தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சியில் அமைந்துள்ளது.[1][2] இப்பள்ளி 1933 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு 6 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். 1997 ஆம் ஆண்டு வரை இது இருபாலர் பயிலும் மேல்நிலைப்பள்ளியாக இருந்தது. 1998 ஆம் ஆண்டு முதல் இது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியாக மாற்றப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழ் பயிற்று மொழியாக உள்ளது. இந்த அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றியடைந்து மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பாகும்.[3]

பள்ளிக்கு என அரசு கட்டடம் உள்ளது. போதனை நோக்கங்களுக்காக 8 வகுப்பறைகளும் பிற பணிகளுக்காக மேலும் 2 அறைகளும் செயல்படுகின்றன. பள்ளிக்கு என ஓரு விளையாட்டு மைதானமும் நூலகமும் உள்ளன. பள்ளி நூலகத்தில் 7815 புத்தகங்கள் உள்ளன.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. தினத்தந்தி (2022-09-14). "தமிழ்நாட்டில் மிகச்சிறந்த அரசு பள்ளிகளில் ஒன்று கீரமங்கலம் மகளிர் மேல்நிலைப்பள்ளி". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-07.
  2. "கீரமங்கலம் அருகே சீரமைக்கப்படாத சாலையில் தடுப்பு ஏற்படுத்திய மக்கள்". Hindu Tamil Thisai. 2022-12-13. பார்க்கப்பட்ட நாள் 2023-05-07.
  3. "மத்திய மண்டலத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 41 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 பேருக்கு வாய்ப்பு". இந்து தமிழ்திசை. https://www.hindutamil.in/news/todays-paper/regional01/602869-.html. பார்த்த நாள்: 30 April 2024. 
  4. "G.B.H.S.S.KEERAMANGALAM". Schools org. https://schools.org.in/pudukkottai/33220602105/g-b-h-s-s-keeramangalam.html. பார்த்த நாள்: 7 May 2023.