அரசு உயர்நிலைப் பள்ளி, நாரணாபுரம்
நாரணாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள நாரணாபுரம் பேரூராட்சியிலுள்ள 2010 ஆம் ஆண்டு மத்திய இடைநிலைக்கல்வித் திட்ட உதவியுடன் தரம் உயர்த்தப்பட்ட ஓர் பள்ளி ஆகும்.[1] அதற்கு முன்பு இப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக இருந்து வந்தது. பள்ளி ஆரம்பிக்கும் போது 34 மாணவர்களைக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டது. பின்பு படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. இப்பள்ளியில் நாரணாபுரம் மற்றும் அதைச் சுற்றி உள்ள ஜமீன்சல்வார்பட்டி, பெத்துலுபட்டி, லட்சுமியாபுரம், சிவகாசிக்கு அருகாமையில் உள்ள பகுதி மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது இப்பள்ளியில் 20 ஆசிரியர்கள் உள்ளனர். 579 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். 2014-15 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் 111 மாணவர்கள் தேர்வு எழுதி 111 மாணவர்களும் தேர்வாகி 100க்கு 100 தேர்ச்சி பெற்றனர்.
2020-21 ஆம் கல்வி ஆண்டில் தற்போது 811 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 30 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் ஆங்கிலப் பிரிவு தொடக்கம்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/Jun/13/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95-916983.html. பார்த்த நாள்: 16 May 2024.