அரசு நூலகத்தில் உள்ள கிழக்கத்திய சுவடிகளின் நூற்பட்டியல் (ஆங்கில நூல்)
அரசு நூலகத்தில் உள்ள கிழக்கத்திய சுவடிகளின் நூற்பட்டியல் (A Catalog Raisonne of Oriental Manuscripts in the Government Library) என்பது 19 ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் வெளியிடப்பட்ட ஒரு நூல் பட்டியல் ஆகும். இது சென்னையில் அமைந்திருத்த புனித ஜார்ஜ் கோட்டை நூலகத்தில் இருந்த சுவடிகளைப் பற்றிய விபரங்களைத் தொகுத்து மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டுளது. இதை வில்லியம் ரெய்லர் தொகுத்துள்ளார். இதன் முதல் தொகுதி 1857 ஆம் ஆண்டிலும், இரண்டாம் தொகுதி 1860 ஆம் ஆண்டிலும் மூன்றாம் தொகுதி 1862 ஆம் ஆண்டிலும் வெளிவந்தன.
இது தென்னிந்திய மொழிகளில் இருந்த பல பல்துறை நூல்களைப் பற்றிய விபரங்களைத் தருகிறது. குறிப்பாக பல அரிய பல்துறைத் தமிழ் நூல்களைப் பற்றிய விபரங்களை இது விரிவாகத் தருகிறது.
இந்த நூல் இணைய ஆவணகத்தில் எண்ணிமப்படுத்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
வெளி இணைப்புகள்
தொகு- A catalogue raisonnée of oriental manuscripts in the library of the (late) college, Fort Saint George, now in charge of the Board of Examiners (1857) - தொகுதி 1
- A catalogue raisonnée of oriental manuscripts in the library of the (late) college, Fort Saint George, now in charge of the Board of Examiners (1857) - தொகுதி 2
- A catalogue raisonnée of oriental manuscripts in the library of the (late) college, Fort Saint George, now in charge of the Board of Examiners (1857) - தொகுதி 3