அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் ஆகும். இவை பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சியை, பொதுப் பிரிவினர் அளவிற்கு இணையாகக் கொண்டு வர அரசால் எடுக்கப்பட்ட முயற்சியாகும். இந்தப் பள்ளியில் மாணவர்கள் கட்டாயம் அங்கேயே தங்கி படிக்க வேண்டும்.
- அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி, பாபநாசம், திருநெல்வேலி - இதில் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடியும். திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேலணையில் இந்தப் பள்ளி அமைந்துள்ளது.
- அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி, நந்தனம் சேமியர்ஸ் சாலை, சென்னை - 1930 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வந்துள்ளது இந்த பள்ளி.
- தமிழக அரசின் ஏகலைவா உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி, ஏத்தாப்பூர் அபிநவம் கிராமம், சேலம் - இந்தப் பள்ளி சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் உள்ள ஏத்தாப்பூர் கிராமத்தில் உள்ளது.