அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கீரமங்கலம்
கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி (G.G.H.S.S.KEERAMANGALAM) தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில், கீரமங்கலம் பேரூராட்சியில் அமைந்துள்ளது. இப்பள்ளி முதலில் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியாக 1979ஆம் ஆண்டு சூன் 30 ஆம் தேதி தொடங்கப்பட்டது. பின் மீண்டும் 1996 ஆம் ஆண்டு சூலை 16 ஆம் நாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்பொழுது தமிழகத்திலுள்ள சிறந்த அரசினர் மேநிலைப் பள்ளிகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.[1][2]
பள்ளியின் கட்டமைப்பு வசதிகள்
தொகு- 5 ஏக்கர் பரப்பளவில் விசாலமான பரப்பளவு
- மிகப்பெரிய பரந்த விளையாட்டு மைதானம்
- மொழி ஆய்வகம் அமைந்துள்ளது
- மிகப்பெரிய கொள்கலன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு கொள்கலன்
- பள்ளி வளாகம் முழுமைக்கும் நடைபாதை கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட தரைத்தளம்
மேற்கோள்கள்
தொகு- ↑ தினத்தந்தி (2022-09-14), "தமிழ்நாட்டில் மிகச்சிறந்த அரசு பள்ளிகளில் ஒன்று கீரமங்கலம் மகளிர் மேல்நிலைப்பள்ளி", www.dailythanthi.com, பார்க்கப்பட்ட நாள் 2023-12-29
- ↑ தினத்தந்தி (2023-06-16), "கீரமங்கலம் அரசு மகளிர் பள்ளி மாணவிகள் 'நீட்' தேர்வில் சாதனை", www.dailythanthi.com, பார்க்கப்பட்ட நாள் 2023-12-29