அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மத்தூர்

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மத்தூர் (Government Higher Secondary School Mathur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கிருட்டிணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்கா மத்தூரில் அமைந்துள்ளது. [1]கிருட்டிணகிரி மாவட்டத்தில் ஐ.எசு.ஓISO தரச் சான்றிதழ் பெற்ற பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும். 1991 ஆம் ஆண்டில் இப்பள்ளி நிறுவப்பட்டது. மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து மகளிர் உயர்நிலைப் பள்ளியாகப் பிரிந்து பின்னர் 1994 ஆம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரையிலான மாணவிகளுக்கு இங்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட 32 பேர் பணியாற்றுகின்றனர். 2021-2022 கல்வி ஆண்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 857 மாணவிகள் பயின்றனர்.

பள்ளி மேலாண்மைக் குழு ஒன்றும் இப்பள்ளியில் செயல்படுகிறது.

Map
வகுப்பு பயிற்று மொழி
தமிழ் ஆங்கிலம்
6 ஆம் ஆம்
7 ஆம் ஆம்
8 ஆம் ஆம்
9 ஆம் ஆம்
10 ஆம் ஆம்
11 MPCC ஆம் இல்லை
MPCB ஆம் ஆம்
PCBZ ஆம் ஆம்
CCAE ஆம் இல்லை
12 MPCC ஆம் இல்லை
MPCB ஆம் ஆம்
PCBZ ஆம் ஆம்
CCAE ஆம் இல்லை

முன்னாள் மாணவிகள் அமைப்பு தொகு

ஆண்டுதோறும் முன்னாள் மாணவிகள் கூட்டம் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வமைப்பின் தலைவியாக ஆசிரியை கோகிலா செயல்படுகிறார். https://chat.whatsapp.com/J7tjlrjfhzuKlld4FtlI3i இணைப்பின் மூலமாக இப்பள்ளியின் புலனக் குழுவில் இணையலாம்.

படக்காட்சியகம் தொகு

 
05.07.2023 - கல்வி வளர்ச்சி நாள் - பள்ளி வளாகம்
 
27.08.2023 - 28.08.2023 - துளிர் அறிவியல் மாநாடு 2023

மேற்கோள்கள் தொகு