அரசு மருத்துவக் கல்லூரி, இராமநாதபுரம்
அரசு மருத்துவக் கல்லூரி, இராமநாதபுரம் (Government Medical College, Ramanathapuram) என்பது தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 2021-2022 கல்வி ஆண்டு முதல் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி ஆகும். இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி துவங்கிட சுமார் 455 கோடி செலவில் பணிகள் துவங்கி நடைபெற்று வந்தன. இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடமும், இராமநாதபுரம் ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மருத்துவ கல்லூரி நிர்வாக கட்டிடம் மற்றும் மாணவ, மாணவியர் விடுதி கட்டிடமும் கட்டப்பட்டது.[1] இதன் பணிகள் முடிவடைந்தை அடுத்து இக்கல்லூரிக்கு தேசிய மருத்துவ ஆணையம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் சனவரி 12, 2022 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி காணொலி காட்சிமூலம் இக்கல்லூரியினைத் திறந்து வைக்கின்றார். நடப்பு கல்வியாண்டு முதல் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெறுகிறது. 100 மாணவர் வீதம் சேர்த்துக்கொள்ளப்படுவர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்க அனுமதி?". Dailythanthi.com. 2021-08-10. பார்க்கப்பட்ட நாள் 2022-01-12.
- ↑ "ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இந்தாண்டு முதல் மாணவர் சேர்க்கை". ETV Bharat News. பார்க்கப்பட்ட நாள் 2022-01-12.