அரசு மேல்நிலைப் பள்ளி, தோவாளை

அரசு மேல்நிலைப் பள்ளி, தோவாளை என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில், தோவாளையில் அமைந்துள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியாகும்.[1] 1882 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட இப்பள்ளி 1960 இல் உயர்நிலைப் பள்ளியாகவும், 1980 ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியின் தற்போதைய தலைமையாசிரியராக த. விஜய குமார் 31.07.2014 - பணியாற்றி வருகிறார். பள்ளியின் வளர்ச்சிப் பணியில் பெற்றோர், ஆசிரியர் சங்கம், கிராமக் கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக் குழு போன்றவை சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றன.

இப்பள்ளியில் மத்திய மாநில அரசுகளின் அனைத்து நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. அரசு மேல்நிலைப் பள்ளி, தோவாளையில் மாநில அரசின் முப்பருவக் கல்வி முறை நடைமுறையில் உள்ளது. இப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் மற்றும் ஒழுக்கச் செயல்பாடுகளை முழுமையாக மதிப்பிடும் பொருட்டு 'தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு' முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

பாடங்கள்

தொகு

மேல்நிலைக் கல்வியில் கணிதம் - உயிரியியல் (தமிழ் மொழி மூலம் மற்றும் ஆங்கில மொழி மூலம்), கணிதம் - கணிப்பொறியியல் (தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலம்), அறிவியல் (தமிழ்மொழி மூலம் மட்டும்), வணிகவியல் - கணிப்பொறியியல் (தமிழ்மொழி மூலம் மட்டும்), வணிகவியல் - வரலாறு (தமிழ்மொழி மூலம் மட்டும்), மின் சாதனங்களும் பொருட்களும் (தொழிற்கல்வி - தமிழ்மொழி மூலம் மட்டும்) ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.

கல்விக்குழு மற்றும் புரவலர்கள்

தொகு

இப்பள்ளியின் வளர்ச்சியில் பள்ளியின் கல்விக்குழு உறுப்பினர்களும் புரவலர்களும் பெரும்பங்கு வகிக்கின்றனர். உயர்நிலைப் பள்ளி உருவாக உழைத்திட்ட ஆரம்பகால கல்விக்குழு உறுப்பினர்களாக சுப்பிரமணியம் (தலைவர்), த. ச. நமச்சிவாயம் , எம். நல்லபெருமாள், தியாகி ஏ. சிவதாணு, கே. சிவ சுப்பிரமணியம், ஏ. பி. எம். புலமுத்து ஆகியோர் இருக்கின்றனர். ரூபாய் 1000 - 25000 வரை நன்கொடையாக வழங்கிய நூற்றுக்கணக்கான புரவலர்களால் இப்பள்ளி மாநில அளவில் பெயர்பெற்ற பள்ளியாக விளங்குகிறது.

சங்கங்களும் மன்றங்களும்

தொகு

கல்விசார் செயல்பாடுகளைத் தவிர, கல்வி இணைச்செயல்பாடுகளிலும் மாணவர்களின் ஆர்வத்தை மேம்படுத்தும் பொருட்டு பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம், சிறார் செஞ்சிலுவைச் சங்கம், பாரத சாரண சாரணியர் சங்கம், தேசிய பசுமைப் படை போன்ற சங்கங்களும், இலக்கிய மன்றம், நூலக மன்றம், ஸ்ருதிலயா எனும் இசைக்கழகம், ஓவிய மன்றம், அறிவியல் மன்றம், கணித மன்றம், சதுரங்க மன்றம் போன்றவையும் செயல்பட்டு வருகின்றன.

முன்னாள் தலைமை ஆசிரியர்கள்

தொகு

மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னரான தலைமை ஆசிரியர்கள்.

  1. எஸ். சுவாமிநாதன் - 01.10.1960 - 31.05.1970
  2. எஸ். எம். அப்துல் காதர் - 01.06.1970 - 10.03.1975
  3. ஏ. காந்தி - 07.05.1975 - 31.05.1978
  4. ஐ. அப்பாவு நாடார் - 02.06.1978 - 26.06.1978
  5. பி. நாகராஜன் - 27.06.1978 - 24.06.1979
  6. கே. துரைசாமி - 25.06.1979 - 08.07.1980

மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னரான தலைமை ஆசிரியர்கள்.

  1. டி. ஸ்ரீ ராமச்சந்திரன் - 09.07.1980 - 02.02.1987
  2. ஜி. பி. ஐசக் வின்ஸிலி - 10.06.1987 - 30.04.1992
  3. எஸ். ராஜா மணி - 01.06.1992 - 31.05.2000
  4. கே. ஈவ்லின் சுகுணா - 23.06.2000 - 08.10.2002
  5. கு. முத்துசாமி - 10.10.2002 - 28.01.2009
  6. நீ. பொன்னையா நாடார் - 01.06.2009 - 31.05.2013
  7. சு.சங்கர் - 01.06.2013 - 31.05.2014

இப்பள்ளியின் ஒரே பெண் தலைமை ஆசிரியை கே. ஈவ்லின் சுகுணா ஆவார்.

மேற்கோள்கள்

தொகு