அரசு மேல்நிலைப் பள்ளி, மாதவலாயம்
மாதவலாயம் அரசு மேல்நிலைப்பள்ளி, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டாரத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியாகும்.[1] [2]இப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக 1978-ம் ஆண்டு துவங்கப்பட்டு, 1998–ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 2005–ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 2017 ஆம் கல்வி ஆண்டின் படி 300 மாணவ மாணவிகளும் 15 ஆசிரியர்களும் உள்ளனர்.
முன்னாள் மாணவர் சங்கம்
தொகுஇப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து பள்ளியின் வளர்ச்சிக்காக முன்னாள் மாணவர் சங்கத்தினை நடத்தி வருகின்றனர்.
பள்ளியில் இயங்கி வரும் அமைப்புகள்
தொகுநாட்டு நலப்பணித்திட்டம்
தொகுநாட்டுநலப்பணித்திட்டம் 2015-ம் ஆண்டு இப்பள்ளியில் துவங்கப்பட்டது. இப்பள்ளியில் 11-ம் வகுப்பில் 25 மாணவ மாணவிகளும் 12-ம் வகுப்பில் 25 மாணவ மாணவிகளும் இத்திட்டத்தில் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.
தகவல் தொழில் நுட்ப மன்றம்
தொகுஇப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு புதிய தகவல் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள தகவல் தொழில்நுட்ப மன்றம் வாரந்தோறும் செயல்பட்டு வருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/sep/03/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2993011.html. பார்த்த நாள்: 29 December 2023.
- ↑ தினத்தந்தி (2022-08-01), "செய்குதம்பி பாவலர் பிறந்த நாள் விழா உருவ படத்துக்கு மாலை அணிவித்து கலெக்டர் மரியாதை", www.dailythanthi.com, பார்க்கப்பட்ட நாள் 2023-12-29