அரசு மேல்நிலைப் பள்ளி, வடகாடு

அரசு மேல்நிலைப்பள்ளி, வடகாடு (Government High Secondary School Vadakadu) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சியில் இயங்கி வரும் ஓர் அரசுப் பள்ளியாகும். இப்பள்ளியில் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது.

பள்ளிக்கு என அரசு கட்டடம் உள்ளது. கற்பித்தல் நோக்கங்களுக்காக 7 வகுப்பறைகளும் கற்பித்தல் அல்லாத நடவடிக்கைகளுக்காக 2 அறைகளும் இங்கு உள்ளன. பள்ளி நூலகத்தில் 1360 நூல்கள் உள்ளன.

தோற்றம்

தொகு

வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளி 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பள்ளிக் கல்வித் துறையால் இப்பள்ளி நிர்வகிக்கப்படுகிறது. திருவரங்குளம் தொகுதியில் அமைந்துள்ள இப்பள்ளி 1985 ஆம் ஆண்டு முதல் மேல்நிலைப்பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது.

மேல்நிலைப் பிாிவில் பயிற்றுவிக்கும் பாடப்பிாிவுகள்

தொகு

1. கணிதம் பிாிவு 2. அறிவியல் பிாிவு 3. வணிகவியல் பிாிவு 4.வேளாண்மை பிாிவு 5. கணக்கு பதிவியல் பிாிவு. 35 ஆண் ஆசிாியா்களும் 10 பெண் ஆசிாியா்களும் பள்ளியில் பணிப்புாிகின்றனா்.

தோ்ச்சி சதவிகிதம்

தொகு

கடந்த 2016-17 கல்வியாண்டில் மேல்நிலை பிாிவில் நுறு சதவிகிதமும் உயா்நிலையில் நுறு சதவிகிதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களின் பன்முகத் திறமைகள்

தொகு

பள்ளி மாணவர்கள் மாவட்ட, மண்டல, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளைப் பெற்றுள்ளனர்.[1] பேச்சு, கட்டுரை, போன்ற போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.[2]. மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பரிசுகளை வென்றுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

தொகு