அரசு மேல்நிலைப் பள்ளி, வெண்ணாவல்குடி

அரசு மேல்நிலைப்பள்ளி, வெண்ணாவல்குடி (Government High Secondary School Vennavalkudi) இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், ஆலங்குடி வட்டம், வெண்ணாவல்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

1970 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இப்பள்ளி,[1] தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படுகிறது. இருபாலரும் பள்ளியில் படிக்கின்றனர். தலைமை ஆசிாியா், ஆசிாியா் ஆசிாியைகள் மற்றும் பெற்றோா் ஆசிாியா் கழகம்[2], சுற்று வட்டார கிராம பொதுமக்கள் ஆகிய அனைவாின் பங்களிப்புடனும் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழி கற்றல் முறையிலும், 11 மற்றும் 12் ஆம் வகுப்புகள் தமிழ் வழி கற்றல் முறையிலும் பயிற்றுவிக்கப்படுகின்றன.

சீருடை, காலனிகள், புத்தகப்பை, பாடநூல்கள், நோட்டுப்புத்தகங்கள், பேருந்து பயண அட்டை, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பு[3] போன்ற அனைத்து தமிழக அரசின் நலத்திட்டங்களும் இப்பள்ளியில் செயல்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு