அரசு (இதழ்)

அரசு இலங்கை, கொழும்பிலிருந்து வெளிவந்த ஒரு மும்மாசிகை இதழாகும். முதல் இதழ் 1975 இல் வெளிவந்துள்ளது.

பணிக்கூற்றுதொகு

  • மாக்சிய மும்மாம சஞ்சிகை

'அரசு மனிதனை அடக்கி ஆளும் ஆரம்ப கருத்தியல் சக்தியாக நம்முன் எழுந்துநிற்கின்றது' என்ற ஏங்கிஸ்சின் கூற்று அட்டை முகப்பில் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது.

நிர்வாகம்தொகு

ஆசிரியர்கள்தொகு

  • ஒஸ்மன் ஜயரத்ன
  • வி. நந்தகுமார்

ஆசிரியர்குழுதொகு

  • ஹெட்டர் அபேவர்தன
  • அனில்முணசிங்க
  • வி. காராளசிங்கம்
  • பீ. வித்தாரன
  • நலிந்தீ சில்வா
  • நந்தகுமார்

தொழில்முகாமையார்தொகு

  • எஸ். சிவகுருநாதன்

முகவரிதொகு

457, யூனியன் பிளேஸ், கொழும்பு 02

உள்ளடக்கம்தொகு

இலங்கையின் அரசியல் பொருளாதாரம் சம்பந்தமான பல்வேறு தரமான ஆக்கங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன. உதாரணமாக: இதன் முதல் இதழில் இலங்கையின் இடதுசாரியின் அரசியல்வாதிகளும், எழுத்தாளர்களுமான கலாநிதி என். எம். பெரேரா, அனில் முனசிங்க, கலாநிதி கொல்வின். ஆர். டீ. சில்வா ஹெக்டர் அபேவர்தன ஆகியோரின் ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசு_(இதழ்)&oldid=2056123" இருந்து மீள்விக்கப்பட்டது