அரணிய மொழி
அரணிய மொழி என்பது ஆக்சித மொழியின் ஒரு வகை ஆகும். இம்மொழி காத்தலோனியாவின் வடமேற்கு பகுதியில் எசுப்பானியா மற்றும் பிரான்சின் எல்லைக்கோட்டின் இடையில் பேசப்படுகிறது. அங்கு காத்தலோனியம் மற்றும் எசுப்பானியதிற்கு அடுத்து இதுவும் ஒரு ஆட்சி மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இம்மொழி அரணியரால் பேசப்படுவதால் இம்மொழி அரணிய மொழி அல்லது அரணியர் மொழி என அழைக்கப்படுகிறது. இன்று பெரும்பாலான அரணியர் எசுப்பானியம் மற்றும் காத்தலோனியம் ஆகிய மொழிகளிலும் சரளமாக பேசுகின்றனர்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Conselh Generau d'Aran. "Cens lingüistic del aranès de 2001". 2001. Retrieved on 22 August 2014. (in Catalan)
- ↑ Collett, Richard. "Aranese: Spain's little-known language". www.bbc.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-18.
- ↑ "El aranés se convierte en la tercera lengua oficial de Cataluña", El País, Barcelona, 22 September 2010. Retrieved on 22 August 2014. (in எசுப்பானிய மொழி)