அரபிப் பிசின்

கருவேல மரத்தில் இருந்து எடுக்கப்படும் பிசின்

அரபி ரெசின் அல்லது அரபிப் பிசின் (Gum arabic or Acacia gum) என்பது இயற்கை தமிழில் கருவேல பிசின் என அழைக்கப்படுகிறது. இது அகேசியா ரெசின் எனவும் அழைக்கப்படுகிறது. இவை இயற்கையாகவே வளரக்கூடிய கருவேல மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது.[1] இவற்றின் இரண்டு இனம் உள்ளன. அவை (1) அக்கேசியா சௌகல் மற்றும் (2) வேச்சிலியா (அக்கெசியா) சேயல். இவற்றின் தாயகம் அரேபியா மேற்கு ஆசியாவாகும். இந்த வகையான மரங்கள் குறிப்பாக மாலியா போன்ற வெப்ப நாடுகளில் 80 சதவீத நிலப்பரப்பில் இயற்கையாக வளர்கிறது. கருவேல பிசினில் கிளைக்கோ புரோட்டீன் மற்றும் பாலி சாக்கரைடு போன்ற சேர்மங்களால் ஆனது. உணவுத் தொழிற்சாலையில் உணவின் தரத்தைச் சீராக வைத்திருக்கவும்,அச்சுத் தொழிலிலும் இது பயன்படுகிறது. மேலும் அழகு சாதனப் பொருட்கள், இனிப்பு வகைகள் ஆகியவை தயாரிக்கவும் பயன்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Re-evaluation of acacia gum (E 414) as a food additive". EFSA Journal 15 (4): e04741. April 2017. doi:10.2903/j.efsa.2017.4741. பப்மெட்:32625453. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரபிப்_பிசின்&oldid=4125922" இலிருந்து மீள்விக்கப்பட்டது