அரபு மற்றும் பாரசீக ஆராய்ச்சி நிறுவனம், இராசத்தான்
மவுலானா அபுல் கலாம் ஆசாத் அரபு மற்றும் பாரசீக ஆராய்ச்சி நிறுவனம் (MAPRI) என்பது இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள டோங் மாவட்டத்தில் அரபு மற்றும் பாரசீக மொழிகளைப்பற்றிய ஆய்வுகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் வகையில் ராசத்தான் அரசாங்கத்தால் 1978 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு இந்திய மொழி ஆராயச்சி நிறுவனமாகும், ராஜஸ்தானில் கண்டறியப்பட்ட பாரசீக மற்றும் அரபு மொழி கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாப்பதையும் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
MAPRI | |
நிறுவப்பட்டது | 1978 |
---|---|
அமைவிடம் | டோங், இராசத்தான், இந்தியா |
வகை | ஆராய்ச்சி மையம், அருங்காட்சியகம் |
சேகரிப்புகள் | திருக்குர்ஆன், வனப்பெழுத்து, ஒளிப்படம், அஞ்சல் தலைகள், வரலாற்று கையெழுத்துப் பிரதிகள் |
வலைத்தளம் | இணையதளம் |
2002 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இதன் கலைக்கூடத்தில் அரபு மற்றும் பாரசீக மொழிகளில் எழுதப்பட்ட கையெழுத்து பிரதிகள், பழங்கால புகைப்படங்கள் மற்றும் தபால்தலைகள் ஆகியவைகளோடு கையால் எழுதப்பட்ட ஒரு மிகப் பெரிய குர்ஆன் பிரதியும் மற்றும் சில வரலாற்று கையெழுத்துப் பிரதிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சிறப்புகள்
தொகுவரலாறு, கிழக்கியல், இஸ்லாமிய ஆய்வுகள், சூஃபிசம், உருது, அரபு மற்றும் பாரசீக இலக்கியங்கள், பட்டியல்கள், மருந்துகள், சுயசரிதைகள், இடைக்கால வரலாறு, சுதந்திரத்தின் அடிப்படையிலான இலக்கியம், கையெழுத்து, தத்துவம் மற்றும் இலக்கியம் பற்றிய 064 கையெழுத்துப் பிரதிகள் மற்றும் 133 அரிய புத்தகங்களின் தொகுப்பு இந்நிறுவனத்தின் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இராஜஸ்தான் அரசின் கலை மற்றும் கலாச்சாரத் துறையின் கீழ் இயங்ககிவரும் இந்த ஆராய்ச்சி மையம் அரபு, பாரசீகம் மட்டுமல்லாது சமஸ்கிருதம், உருது போன்ற பிற மொழியில் உள்ள கையெழுத்துப்பிரதிகளையும் பராமரித்து வருகிறது. தொடக்கத்தில் அரபு மற்றும் பாரசீக ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் இயங்கி வந்த இந்நிறுவனம் மவுலானா அபுல் கலாம் ஆசாத் அரபு மற்றும் பாரசீக ஆராய்ச்சி நிறுவனம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "மௌலானா அபுல் கலாம் ஆசாத் அரபு பாரசீக நிறுவனம்". பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.