அரவிந்தன் (இயக்குநர்)

மலையாளத் திரைப்பட இயக்குநர்

அரவிந்தன், மலையாளத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது முழுப்பெயர் கோவிந்தன் அரவிந்தன் (கோ. அரவிந்தன்) என்பதாகும்.[1][2][3]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவர் 1935 சனவரி 21 ல் கோட்டயத்தில் பிறந்தார். மலையாள எழுத்தாளரான எம். என். கோவிந்தன் நாயர் இவரது தந்தை. திரைப்பட இயக்குநராகும் முன், மாத்ருபூமி இதழில் ‘செறிய மனுஷ்யரும் வலிய லோகவும்’ என்னும் சித்திரக்கதை எழுதியிருந்தார். 1960களின் ஆரம்பத்தில் வெளியான இந்தக் கதையில் ராமு, குருஜி என்ற கதாப்பாத்திரங்களைக் கொண்டிருந்தது.

திரைத்துறை

தொகு

சிதம்பரம், வாஸ்துஹாரா உட்பட திரைப்படங்கள், சி. வி. ராமனின் சிறுகதைகளை முதன்மைப்படுத்தி வெளிவந்தன.

விருதுகள்

தொகு

இவர், சிறந்த இயக்குனருக்கான அரசின் விருதினை, 1974, 1978, 1979, 1981, 1985, 1986, 1990 ஆகிய ஆண்டுகளில் பெற்றார். சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதினை 1977, 1978, 1986 ஆகிய ஆண்டுகளில் பெற்றார்.

அரவிந்தன் 1991 மார்ச்சு 15 ஆம் நாள் அன்று இறந்தார்.

இயக்கிய திரைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Obituary Variety, 25 March 1991.
  2. Srikanth Srinivasan (12 October 2013). "Outtakes: G. Aravindan". The Hindu. Retrieved 21 February 2015.
  3. "The Hindu : Kerala / Kochi News : Remembering Aravindan". www.hindu.com. 14 September 2006. Archived from the original on 2006-09-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவிந்தன்_(இயக்குநர்)&oldid=4160462" இலிருந்து மீள்விக்கப்பட்டது