அராக்னோசர்வர்
அராக்னோசர்வர் (ArachnoServer) என்பது சிலந்தி நச்சுப்பொருட்களான புரத நச்சுகள் பற்றிய தகவல்களைச் சேமிக்கும் தரவுத்தளமாகும்.[1]
உள்ளடக்கம் | |
---|---|
விவரம் | சிலந்தி நச்சு, நச்சி அமைப்பின் மூலங்கள் |
உயிரினங்கள் | சிலந்தி |
தொடர்பு | |
ஆய்வு மையம் | குயின்சுலாந்து பல்கலைக்கழகம், பிரிசுபேன் |
ஆய்வகம் | மூலக்கூறு உயிர் அறிவியல் நிறுவனம் |
முதன்மைக் குறிப்புரை | 21036864 |
வெளியிட்ட நாள் | 2009 |
அணுக்கம் | |
வலைத்தளம் | www |
கருவிகள் | |
ஏனையவை |
iஅராச்னோசர்வரில் தகவல்கள் மனித உள்ளீடு முறையில் நிர்வகிக்கப்படுகிறது. இது புரத வரிசை முறை பற்றிய தகவல்களை ஒருங்கிணைக்கிறது. சிலந்தி-விசம் சிக்கலான அமைப்பினைக் கொண்டிருப்பினும், இதன் செயல்பாடு மற்றும் மருந்தியல், நரம்பு மண்டலத்தைக் குறிவைக்கும் சிறிய டை சல்பைட்-பிணைப்பு பெப்டைடுளைச் சார்ந்தது. அதிக ஆற்றல் மற்றும் தேர்ந்தெடுப்புத்திறன் காரணமாக, இந்த பெப்டைடுகள் மருந்தியல் கருவிகள், உயிர்க்கொல்லி மற்றும் மருந்துகளாக உருவாக்கப்பட்டுள்ளன.[2]
அராச்னோசர்வரின் புதிய பதிப்பில் (v3.0) விசம்-சுரப்பி டிரான்ஸ்கிரிப்டோம்களில் பெப்டைட் நச்சுப் பிரதிகளைத் தானியங்கி முறையில் கண்டறிதல் மற்றும் பகுப்பாய்வு செய்வதற்கான உயிர் தகவல்தொடர்பினையும் அடக்கியுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Herzig, Volker; Wood David L A; Newell Felicity; Chaumeil Pierre-Alain; Kaas Quentin; Binford Greta J; Nicholson Graham M; Gorse Dominique et al. (Jan 2011). "ArachnoServer 2.0, an updated online resource for spider toxin sequences and structures". Nucleic Acids Res. (England) 39 (Database issue): D653-7. doi:10.1093/nar/gkq1058. பப்மெட்:21036864.
- ↑ Pineda SS, Chaumeil PA, Kunert A, Kaas Q, Thang MWC, Le L, Nuhn M, Herzig V, Saez NJ, Cristofori-Armstrong B, Anangi R, Senff S, Gorse D, King GF. ArachnoServer 3.0: an online resource for automated discovery, analysis and annotation of spider toxins. Bioinformatics. 2018 Mar 15;34(6):1074-1076. doi: 10.1093/bioinformatics/btx661. PMID: 29069336.