அராபியன் வடிநிலம்

அராபியன் வடிநிலம் (Arabian Basin) அரேபிய தீபகற்பத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் அரபிக் கடலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெருங்கடல் வடிநிலம் ஆகும். இவ்வடிநிலம் இது 10° வடக்கு, 65° கிழக்கு ஆள்கூறுகளில் மையம் கொண்டுள்ளது.[1] இப்படுகையின் ஆழம் வடக்கில் 3,400 மீ முதல் தெற்கில் 4,400 மீ வரையிலும் உள்ளது. அராபியன் வடிநிலத்தின் அதிகபட்ச ஆழம் 4,652 மீட்டர்களாகும்.[1] தரையானது சிந்து நதியின் கடலடி விரிதுறை வண்டல் படிவுகளால் மூடப்பட்டிருக்கும். இது ஒப்பீட்டளவில் மென்மையானதாகும்..[2]

கோண்ட்வானாவின் ஆரம்பகால சுராசிக்கு பகுதிகள் (இடது) மற்றும் A- ஆரம்பகால சீமைச்சுண்ணாம்பு , B- பிற்கால சீமைச்சுண்ணாம்பு, C--மூன்றாம் ஊழி முதற்காலம், D- தற்காலம் (வலது)

இந்த வடிநிலத்தின் தெற்கு பகுதி கார்ல்சுபெர்க் முகடு மற்றும் சாகோசு-இலட்சத்தீவு பீடபூமி ஆகியவற்றால் ஆன மத்திய இந்திய முகடால் உருவாக்கப்பட்டதாகும். மேற்கில் உள்ள ஓவன் பிளவு மண்டலம் வழியாக கீழ் நீர் படுகைக்குள் நுழைகிறது.[3] கார்ல்சுபெர்க்கு முகடு 3,800 மீ ஆழத்தில், சோமாலியப் படுகையில் இருந்து தென்மேற்கே இந்தப் படுகையைப் பிரிக்கிறது.[1] அரேபியப் படுகை ஆழமற்ற ஓமன் படுகையில் இருந்து முர்ரே முகடு மூலம் பிரிக்கப்பட்டுள்ளது.[4] வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் பெரும்பாலானவை லட்சுமி முகடு மற்றும் இலட்சத்தீவு பீடபூமியால் உருவாகின்றன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 McCutcheon, Scott; McCutcheon, Bobbi (2003). The Facts on File marine science handbook. Facts on File Science Handbooks. Infobase Publishing. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8160-4812-6.
  2. 2.0 2.1 Gupta, Rabin Sen; Desa, Ehrlich (2001). The Indian Ocean: a perspective. Vol. 2. Taylor & Francis. p. 715. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-5809-224-0.
  3. Tyler, Paul A. (2003). Ecosystems of the deep oceans. Ecosystems of the world. Vol. 28. Elsevier. p. 223. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-444-82619-X.
  4. Black, Kenneth D.; Shimmield, Graham B. (2003). Biogeochemistry of marine systems. Sheffield Biological Sciences. CRC Press. p. 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-2818-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அராபியன்_வடிநிலம்&oldid=4088068" இலிருந்து மீள்விக்கப்பட்டது