அரிக்கேன் விளக்கு

அரிக்கேன் விளக்கு எல்லோராலும் லாந்தர் விளக்கு என்று அழைக்கப்படுவது அரிக்கேன் விளக்காகும்[1]. சிம்னிவிளக்கின் வெளிச்சக்குறைவைப் போக்குவதற்காக இவ்விளக்கானது உருவாக்கப்பட்டது.

அரிக்கேன் விளக்கு

மேம்பட்ட பாதுகாப்பு தொகு

தீப்பந்தம் போல் காற்றில் அனணந்து விடாமலும், சிம்னி விளக்கினைப் போல் வெளிச்சம் குறைவாக இல்லாமலும் மேம்பட்ட வடிவமைப்பின் மூலம் காற்றில் அணைந்துவிடாமல், மிகுதியான வெளிச்சத்தைத் தருவது அரிக்கேன் விளக்காகும்.

வகை இரண்டு தொகு

மின்சார விளக்கின் பயன்பாட்டுக்காலத்திற்கு முன்பாக சிம்னி, அரிக்கேன் எனும் இருவிளக்குகளின் பயன்பாடுகளே அதிகம்.

வீட்டு விளக்கு தொகு

சிம்னி விளக்கு வீட்டிற்குள் புழங்குகின்ற விளக்காகப் பயன்பட்டது. அதாவது இரவு வந்தவுடன் சுமாா் ஏழு மணிவாக்கிலேயே சிம்னி விளக்கின் வெளிச்சத்திலேயே அனைவரும் இரவு உணவை உண்டு முடித்துவிடுவார்கள்.

தோட்ட விளக்கு தொகு

இரவு நேரங்களில் தோட்ட வேலைகளுக்கும்,கழனி வேலைகளுக்கும் , ஊர்கடந்து போகின்ற பயணங்களுக்கும் அாிக்கேன் விளக்கு பயன்படுத்தப்பட்டது.

சொல் விளக்கம் தொகு

அரிக்கேன் விளக்கு

ஆங்கிலப்பெயர் தமிழ்ப்பெயர் பெயர் விளக்கம்
HURRICANE அரிக்கேன் புயல்

புயல் காற்றிலும் அணையாத விளக்கு என்பது பெயர்விளக்கம்.

வடிவச் சிறப்பு தொகு

சிம்னிவிளக்கில் குறைந்த அளவு மண்ணெண்ணெயே நிரப்பமுடியும். நீண்ட நேரத்திற்குப் பயன்படுத்த முடியாது. ஆனால் அரிக்கேன் விளக்கானது நீண்ட நேரம் வெளிச்சத்தைத் தரும்வகையில் பெரிய அளவிலான எண்ணெய் சேமிப்புக்கலனைக் கொண்டுள்ளது.

பயன்பாட்டிடங்கள் தொகு

குறிப்பாக வீடுகளில் அன்றுமுதல் இன்றுவரை மிகுந்த வரவேற்புடன் காணப்படும் இவ்விளக்கானது மினசாரம் நின்றவுடன் தனது பயன்பாட்டை மிகச்சிறப்பாக செய்யத் தொடங்கிவிடும். இவ்விளக்கின் திரி அகலவடிவம் கொண்டதாக அமைந்திருப்பதால் அதிகமான வெளிச்சப்பயன்பாட்டை பெறமுடிகிறது.

அமைப்பு நுட்பம் தொகு

எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வகையில் கைப்பிடி வளையத்தோடு இந்த விளக்குக் காணப்படும். 40 வருடங்களுக்கு முற்பட்ட காலங்களில் பயணங்களின் போது இவ்விளக்கின் பயன்பாடு பெரிதும் உதவியாக இருந்தது வந்தது.

அரிக்கேன் விளக்கின் பகுதிகள் தொகு

  1. மண்ணெண்ணெய் சேமித்து வைக்கும் கலன்
  2. திரி ஏற்றும் பகுதி
  3. கண்ணாடிக் குடுவைப் பகுதி
  4. புகைபோக்கிப் பகுதி
  5. விளக்கின் கைவளையப் பகுதி.

தவிர்க்கமுடியத பயன்பாடு தொகு

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு இவ்வகை விளக்குகள் பெரிதும் துணைப்பொருளாக விளங்குகின்றன. கடல் பகுதியில் எவ்வளவு காற்று வீசினாலும் இந்த விளக்கு அணையாததே இதற்குக் காரணம்.

பயன்பாட்டுச் சிறப்புகள் தொகு

  • எடை குறைவு
  • கையாளுவதற்கு எளிமை
  • வெளிச்ச மிகுதி
  • நீண்ட நேரம் எரியும் பயன்பாடு
  • அதிக எண்ணெயைச் சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி
  • புயல் காற்றிலும் அணைந்து விடாத விளக்கின் வடிவம்
  • திரியை ஏற்றி இறக்குவதற்கு இலகுவான நகர்த்திப் பகுதி

சீதன விளக்கு தொகு

பெண்ணுக்குத் திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்குச் செல்லும் போது கொடுத்தனுப்புகின்ற சீதனப்பொருட்களில் சிம்னி விளக்கும் , அரிக்கேன் விளக்கும் அவசியம் வைக்கப்படும். மின்சார விளக்குகள் மலிந்த இந்தக்காலத்திலும் இந்த பண்பாடு இன்றளவும் பின்பற்றப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிக்கேன்_விளக்கு&oldid=2748603" இலிருந்து மீள்விக்கப்பட்டது