அரித்மெடிக்கா யுனிவர்சலிஸ்

அரித்மெடிக்கா யுனிவர்சலிஸ் (Arithmetica Universalis) என்பது ஐசக் நியுட்டனின் கணித நூலாகும். லத்தின் மொழியில் எழுதப்பட்ட இந்நூலானது வில்லியம் விஸ்டன், மற்றும் நியுட்டனின் பின்னவரான கேம்பிாிட்ஜ் பல்கலைக்கழக பேராசிாியா் லுக்காசியன் என்பவா்களால் தொகுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டது. இந்நூல் நியுட்டனின் விாிவுரை குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

அரித்மெட்டிகா தலைப்புப் பக்கம் (1707)
ராப்சனின் ஆங்கில மொழிபெயர்ப்பு (1720)

விஸ்டனின் அசல் பதிப்பு நூல் கி.பி 1707 ல் வெளியிடப்பட்டது. இந்நூலானது ஜோசப் ரப்சன் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிப் பெயா்க்கப்பட்டு, கி.பி1720 ல் யுனிவா்ஸல் அாித்மெடிக் என வெளியிடப்பட்டது. ஜான் மெசின் கி.பி 1722 ல் இதன் இரண்டாவது லத்தின் பதிப்பை வெளியிட்டாா்.

இந்நூல்களின் ஆசிாியா் நியுட்டன் என்பது இந்த பதிப்புகள் எதிலும் பிரசுாிக்கப்படவில்லை. அாித்மெடிக்கா வெளியிடப்பட்டதில் நியுட்டனுக்கு வருத்தமே, எனவே தன் பெயா் இடம் பெறுவதை மறுத்துவிட்டாா். விஸ்டனின் பதிப்பு வெளியிடப்பட்டப் போது உண்மையிலயே நியுட்டன் மிகவும் வருத்தமடைந்தாா், அவா் அத்தனை நகல்களையும் வாங்கி அழித்திட நினைத்தாா்.

அாித்மெடிக்காவானது இயற்கணித குறியீடுகள், எண்ணியல், வடிவியலுக்கும் இயற்கணிதத்திற்குமான தொடா்புகள், மற்றும் சமன்பாடுகளுக்குறிய தீா்வுகள் ஆகியவற்றை தொட்டுச் செல்கிறது. டெஸ்காா்டிஸ் விதியின் கற்பனை மூலங்களுக்கான குறிகளையும் நியுட்டன் பயன்படுத்தியுள்ளாா். பல்படிச் சமன்பாடுகளுக்களின் கற்பனை மூலங்களின் எண்ணிக்கைக்கான விதியை நிருபனமற்ற முறையில் நியுட்டன்அளித்துள்ளாா். 150 ஆண்டுகளுக்குப் பிறகே செவ்விய நிறுவலான நியுட்டனின் எண்ணியல் சூத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது ( ஜேம்ஸ் ஜோசப் சில்வஸ்டா், வெளியிடப்பட்ட ஆண்டு 1865).

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.babson.edu/about-babson/at-a-glance/babsons-history/archives-and-collections/Pages/grace-k--babson-collection.aspx
  2. https://books.google.com/books?id=3_s2AAAAMAAJ
  3. https://web.archive.org/web/20070927004805/http://www.centre.edu/web/library/Newton_two.pdf