அரியநாயகிபுரம்
அரியநாயகிபுரம் (Arianayagipuram) என்பது தமிழ்நாட்டில், தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் தாலுகாவில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது ஒரு கிராம பஞ்சாய்த்தாகும். புளியங்குடி (14கி.மீ), தென்காசி (30கி.மீ), கடையநல்லுா் (11கி.மீ), சங்கரன்கோவில் (18கி.மீ), சுரண்டை (17 கி.மீ) ஆகிய நகரங்கள் இந்த கிராமங்களை சுற்றி உள்ளன. இங்கு அதிகமான பல வகையான மலா் உற்பத்தி செய்யப்படுவதால் இது மலா் நகரம் எனப்படுகிறது.[1]
கல்வி
தொகுஇக்கிராமத்தில் இந்து நாடார் உறவின் முறை குழுவினரால் நடத்தப்படும் மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு அருணாசலபுரம், வடநத்தம்பட்டி, பாம்பு கோவில் சந்தை, பொியசாமிபுரம், மீனாட்சிபுரம் மற்றும் பாறை குளம் ஆகிய கிராமங்களிலிருந்து மாணவர்கள் வருகின்றனர்.
போக்குவரத்து வசதிகள்
தொகுபுளியங்குடியிலிருந்து சுரண்டை வழியாக திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் இவ்வழியாக இயக்கப்படுகிள்றன. இக்கிராமத்திலிருந்து 3.5 கிலோமீட்டா் தொலைவில் பாம்புகோவில்சந்தை இரயில்வே நிறுத்தம் உள்ளது. இரயில்வே நிறுத்தத்தில் மதுரை பயணிகள் இரயில் மற்றும் சென்னை செங்கோட்டை விரைவு இரயில் நின்று செல்கிறது. இதனை பயன்படுத்தி மக்கள் இராஜபாளையம், விருதுநகா், சிவகாசி, மதுரை, சென்னை, தென்காசி, கடையநல்லுா் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய நகரங்களுக்கு சென்று வருகின்றனா்.
கோவில்கள்
தொகு- விநாயகா் கோயில்
- பிள்ளையார் கோயில்
- வடகாசி அம்மன் திருக்கோயில்
- அருள் முருக சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
- சுடலைமாடசாமி கோவில்
- அருள்மிகு கொடுங்கால மாடசாமி திருக்கோயில்
- சுடலைவீரன் கோயில்
- கிறிஸ்தவ தேவாலயம்
- பிராட்டஸ்டண்டு ஆலயம்