அரி கோவிந்தராவ் வர்தக்கு

இந்திய அரசியல்வாதி

அரி கோவிந்தராவ் வர்தக்கு (Hari Govindrao Vartak) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் சமூக ஆர்வலருமாவார்.[1] பாவ்சாகேப் வர்தக்கு என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதியன்று அரி கோவிந்தராவ் வர்தக்கு பிறந்தார். வசந்தராவ் நாயக்கின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றினார். பொது சுகாதாரம், உப்பு நிலம் மற்றும் மீன்பிடித் துறை பணிகளை இவர் கையாண்டார்.[2][3] மகாராட்டிரா அரசாங்கத்தில் வருவாய்த்துறை அமைச்சராகவும் அரி கோவிந்தராவ் வர்தக்கு பணியாற்றினார்.[4]

சமூகத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக நாட்டின் நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை இந்திய அரசாங்கம் 1991 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கி கௌரவித்தது.[5]

அரி கோவிந்தராவ் வர்தக்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். 1962 ஆம் ஆண்டு மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலில் பாசெயின் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. "'भाऊसाहेब वर्तक हे महानायक'" (in Marathi). Maharashtra Times. February 14, 2017. https://maharashtratimes.com/maharashtra/thane/vasai-virar-agashi-bhausaheb-vartak-school/articleshow/57133174.cms. 
  2. Year of Freedom. Indian National Congress. 1963. பக். 339. https://books.google.com/books?id=tgceAQAAIAAJ&dq=Hari+Govindrao+Vartak&pg=PA339. 
  3. Dr. Dinesh Sewa Rathod. VASANTRAO NAIK: A Pioneer In Politics And The Father Of Agro-Industrial Revolution. பக். 83. https://books.google.com/books?id=ib4OEAAAQBAJ&dq=Hari+Govindrao+Vartak&pg=PA83. "Mr.Hari Govindrao Vartak (Public health, Salt land and fishing)" 
  4. "माजी महसूलमंत्री वर्तक यांची जमीन हडपली" (in Marathi). Lokmat. January 30, 2019. https://www.lokmat.com/thane/former-revenue-minister-vartaks-land-grabbed/. 
  5. "1991 - Padma Awards". Padmaawards.gov.in.
  6. "Bassein Maharashtra Assembly Election 1962". Latestly.