அரீசு சந்திர பாக்சிபத்ரா
அரீசு சந்திர பாக்சிபத்ரா (Harish Chandra Buxipatra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1933 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு ஒடிசா சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். 1990 ஆம் ஆண்டில் ஒடிசாவின் பத்தாவது சட்டமன்றத்தில் 1990 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 3 ஆம் தேதி முதல் 1995 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் தேதிவரை கோராபுட்டு தொகுதியின் ஒரிசா சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் அமைச்சராகவும் பதவி வகித்தார்.[1] ஒரு செயற்பாட்டாளரகவும் எழுத்தாளராகவும் அரீசு சந்திர பாக்சிபத்ரா அறியப்படுகிறார். செயப்பிரகாசு நாரயண் இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார். [2] [3] புக்சிபத்ரா 1959 ஆம் ஆண்டில் மாணவர் வாழ்க்கையில் இருந்த கலத்தில் பொதுவுடமைக் கட்சியில் சேர்ந்தார். ஒரு தொழிற்சங்கவாதியாகவும் அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவராகவும் இருந்தார். பின்னர் 1973 ஆம் ஆண்டில் இவர் உத்கல் காங்கிரசில் சேர்ந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Pioneer, The. "Jeypore set to witness triangular fight" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 November 2018.
- ↑ "A Tribute to late Harishchandra Baxipatra -". பார்க்கப்பட்ட நாள் 28 November 2018.
- ↑ "Poverty all set to get aggravated". பார்க்கப்பட்ட நாள் 1 July 2020.