அருட்லா கமலா தேவி
இந்திய அரசியல்வாதி
அருட்லா கமலா தேவி (Arutla Kamala Devi) ஒரு இந்திய அரசியல்வாதி, சுதந்திர போராட்ட வீரர் மற்றும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் ஆவார். இவர் 1952 முதல் 1967 வரை தொடர்ந்து 3 முறை அலையர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். ஐதராபாத் நிசாமின் ஆட்சிக்கு (முன்னாள் ஐதராபாத்து சமத்தானத்தின் கடைசி ஆட்சியாளர்) எதிராக ஆயுதமேந்திய சுதந்திரப் போராட்டத்தில் தலைவர்கள் மற்றும் போராளிகளில் ஒருவராகவும் இருந்தார். நிஜாமின் நிலப்பிரபுத்துவ ஆட்சியைக் கவிழ்க்க 1940களில் இன்றைய தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஏழை விவசாயிகளுடன் கம்யூனிஸ்டுகள் இணைந்தனர். இது இந்தியாவின் மிகப்பெரும் சுதந்திரப் போராட்டத்தில் துணை இயக்கமாக இருந்தது. இந்தியாவின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரும் இவர் ஆவார். [1] [2]
அருட்லா கமலா தேவி | |
---|---|
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1952–1967 | |
முன்னையவர் | Position created |
பின்னவர் | ஆன்ரெட்டி புன்னா ரெட்டி |
தொகுதி | அலையர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1920 Manthapuri |
இறப்பு | 1 January 2001 |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
துணைவர் | அருட்லா இராமச்சந்திர ரெட்டி |
மேற்கோள்கள்
தொகு- ↑ Boda, Manohar (March 21, 2018). "Arutla Kamala Devi: First Opposition Woman Leader In India | #IndianWomenInHistory". Feminism In India.
- ↑ "Andhra Pradesh 1962".