அருணாசலேஸ்வரர் கோயில், அம்மாப்பேட்டை
அருணாசலேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் அம்மாப்பேட்டையில், தஞ்சாவூரிலிருந்து கிழக்கே 21 கிமீ. தொலைவில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] [2]
மூலவர்
தொகுமூலவர் அருணாசலேஸ்வரர் லிங்கத்திருமேனியாக உள்ளார். இறைவி தர்மசம்வர்த்தனி. பிரதான வாயில் கிழக்காக இருந்தாலும் இறைவி சன்னதிக்கு எதிரில் உள்ள தெற்கு வாயிலே பெரும்பாலும் பக்தர்களால் பயன்படுத்தப்படுகிறது. [3]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயில் நுழைவாயில், திருச்சுற்று, மூலவர் விமானம், இறைவி விமானம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மகாமண்டபத்தில் பலிபீடம், நந்தி ஆகியவற்றை அடுத்து இடது புறத்தில் நடராஜ சபை, இறைவி சன்னதி, நவக்கிரக சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. மூலவர் சன்னதியின் வலது புறத்தில் சோமாஸ்கந்தர் சன்னதியும், இடது புறத்தில் விக்கிரமாகாளியின் சன்னதியும் உள்ளன. திருச்சுற்றில் விநாயகர், சுப்ரமணியர், காசிலிங்கம், கஜலட்சுமி, ராமலிங்கம், சண்டிகேஸ்வரர், துர்க்கை, சனீஸ்வரர், பைரவர், சிவசூரியன் சன்னதிகள் உள்ளன. மூலவர் கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
பூசைகள்
தொகுஇங்கு இருகால பூசை நடைபெறுகிறது. பிரதோஷம், சங்கடஹரசதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி, கார்த்திகை சோமவாரம், கந்த சஷ்டி, திருவாதிரை உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
குடமுழுக்கு
தொகுகோயிலின் குடமுழுக்கு பார்த்திப ஆண்டு ஆவணி 30 ஆம் நாள், 15 செப்டம்பர் 2005,வியாழக்கிழமையன்று நடைபெற்றது.
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகுபடத்தொகுப்பு
தொகு-
தெற்கு வாயில்
-
உள்மண்டப முகப்பு
-
மூலவர் விமானம்
-
இறைவி விமானம்
-
சோமாஸ்கந்தர் விமானம்
-
நடராஜர் விமானம்