அருணாச்சலம் சரவணமுத்து

அருணாச்சலம் சரவணமுத்து (கொக்குவில், யாழ்ப்பாணம், இலங்கை), (பிறப்பு தை 09, 1919) ஒரு முக்கிய தமிழறிஞர், இலக்கிய விமர்சகர் மற்றும் சைவ சித்தாந்தச் சிந்தனையாளர் ஆவார்.

அருணாச்சலம் சரவணமுத்து
பிறப்புதை 09, 1919
கொக்குவில், யாழ்ப்பாணம்
இறப்புஆனி 02, 2005
கொக்குவில், யாழ்ப்பாணம்
இருப்பிடம்கொக்குவில், யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்விBA (யாழ்ப் பல்கலைக்கழகம், 19__)
பணிதமிழாசிரியர், பண்டிதர், சைவப்புலவர்
பணியகம்வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரி(யாழ், 19__-1987)
வாழ்க்கைத்
துணை
கண்ணம்மா எனப்படும் செல்வராணி
பிள்ளைகள்பேராசிரியர்.ச.விக்னேஸ்வரன்
பேராசிரியர்.ச.மகேஸ்வரன்
திரு.ச.குமரேசன்
திருமதி.கலாதேவி நடராஜா
உறவினர்கள்திரு.அருணாச்சலம் விஷ்வநாதன்முன்னாள் அதிபர், அளவெட்டி அருணோதயாக் கல்லூரி

கல்வியும் கல்விப்பணியும்

தொகு

அளவெட்டி அருணோதயாக் கல்லூரியில் தன் பாடசாலைக்கல்வியை பெற்றார். பின்னர் பயிற்றப்பட்ட ஆசிரியராக பணியிலிணைந்து இலங்கையின் தென் மாகாணங்களில் சில காலம் பணியாற்றினார். பின்னர் வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரிக்கு மாற்றலாகி தன் ஆசிரியப்பணியின் இறுதிக்காலம் வரை அங்கேயே பணிசெய்தார்.

இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள யாழ்ப் பல்கலைக் கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும், பின்னர் இலண்டன் பல்கலைக் கழகத்தில் மேலதிக கல்வியினையும் பெற்றுக்கொண்டார். இந்தியாவில் வசித்தகாலத்தில் சமஷ்கிருதம், பாளி போன்ற மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றிருந்தார்.

சைவ சித்தாந்தத்தில் பேரார்வம்

தொகு

சைவ சித்தாந்தத்தில் கொண்டிருந்த பேரார்வம் காரணமாக இந்தியா சென்று இரமணாச்சிரமத்தில் தங்கி ஆன்ம விசாரணைகளில் ஈடுபட்டிருந்தார். இலங்கை திரும்பியபின் யாழ் வேதாந்த மடத்துடனும், வேறு பல மெய்யியல் அறிஞர்களுடனும் தொடர்புகளைப் பேணி வந்தார்.

இராமகிருஷ்ண நிலையத்தில் அரும்பணி

தொகு

யாழ்ப்பாணத்தில் இராமகிருஷ்ண நிலையத்தை முதன்முதலில் நிறுவிய பெருமை இவரைச் சாரும். பல வருடங்கள் இப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டார். பின்னர் போரின் காரணமாக இராமகிருஷ்ண நிலையம் செயலற்றுப் போனமை கண்டு மனம் வருந்தினார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணாச்சலம்_சரவணமுத்து&oldid=4115938" இலிருந்து மீள்விக்கப்பட்டது