அருண்குமார் அரவிந்த்
அருண்குமார் அரவிந்த் (Arun Kumar Aravind- மே 22, 1977) மலையாளத் திரைப்பட இயக்குநர். மலையாளத்தில் புதியதலைமுறைப் படங்கள் என்று சொல்லப்படும் திரை அலையை உருவாக்கியவர்களில் ஒருவர்
அருண்குமார் அரவிந்த் | |
---|---|
பிறப்பு | 22 மே 1977 திருவனந்தபுரம், கேரளம், இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர், படத்தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2003-நடப்பு |
வாழ்க்கைத் துணை | ஐசுவர்யா |
பிள்ளைகள் | அர்ஷா |
திரைவாழ்க்கை
தொகுஅருண்குமார் அடிப்படையில் ஒரு திரைப்படத் தொகுப்பாளர். 2004ல் வெளிவந்த வெட்டம் என்ற மலையாளப்படத்தை படத்தொகுப்பு செய்தார். அதன்பின் இயக்குநர் பிரியதர்சனின் பெரும்பாலான படங்களுக்கு படத்தொகுப்பாளராகப் பணியாற்றினார்[1].
2010 ல் சியாம் மேனன் எழுதிய காக்டெய்ல் என்ற சினிமாவை இயக்கியபடி இயக்குநராக அறிமுகமானார்[2][3]. அதன்பின் 2011 ல் முரளி கோபி திரைக்கதை எழுதிய ஈ அடுத்த காலத்து என்ற படமும் 2012ல் லெஃப்ட் ரைட் லெஃப்ட் என்ற அரசியல் விமர்சனப்படமும் இவரது இயக்கத்தில் வெளிவந்தன. ஜெயமோகன் திரைக்கதை எழுதிய ஒன் பை டூ என்ற படத்தை இப்போது இயக்கிக் கொண்டிருக்கிறார்
விருதுகள்
தொகுஈ அடுத்த காலத்து படம் திருவனந்தபுரம் திரைவிழாவில் சிறந்த படம் மற்றும் திரைக்கதைக்கான விருதைப் பெற்றது. ஏஷியாநெட் விருது சிறந்த படத்தொகுப்புக்காக வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-03. பார்க்கப்பட்ட நாள் 2013-09-30.
- ↑ http://expressbuzz.com/entertainment/news/the-new-%E2%80%98cocktail%E2%80%99-party/297282.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-10. பார்க்கப்பட்ட நாள் 2013-09-30.