அருண் கார்த்திக்
கோண்டா பாஸ்கர் அருண் கார்த்திக் (பிறப்பு: பிப்ரவரி 15 1986, வாலாசாபேட்டை, தமிழ்நாடு), இந்திய அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் தற்போது அசாம் அணிக்காக விளையாடுகிறார். இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் உறுப்பினராக உள்ளார். கார்த்திக் ஒரு வலது கை துடுப்பாட்டுக்காரர் மற்றும் சுழல்பந்து வீச்சாள்ர், ஆவார். இப்போது அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கான விக்கெட் கீப்பர் மற்றும் துடுப்பட்டுக்காரர் ஆவார்.
நவம்பர் 2007 இல் இலங்கை அணியின் பதுரலிய்யா ஸ்போர்ட்ஸ் குழுவுக்காக விளையாடி 38 ஓட்டங்களை எடுத்தார்.[1]] 2007-08 ல் நடந்த அனைத்து போட்டியிலும் அவர் பதுரலிய்யா அணியில் இருந்தார், அவர் அந்த தொடரில் மிக அதிகம் ஓட்டங்கள் எடுப்பவராகவும் இருந்தார்.[2][2]
Iநவம்பர் 2008 கார்த்திக் கர்நாடக அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கர்நாடக அணிக்கு எதிராக 149 ரன்கள் எடுத்தார். அவர் வித்யுத் சிவராமகிருஷ்ணனுடன் சேர்ந்து 246 ஓட்டங்கள் எடுத்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Chilaw Marians Cricket Club v Badureliya Sports Club, 2007/08, CricketArchive, Retrieved on 27 November 2008
- ↑ 2.0 2.1 Batting Averages for Badureliya Sports Club