அருண் குமார் உப்ரீதி
இந்திய அரசியல்வாதி
அருண் குமார் உப்ரீதி (Arun Kumar Upreti) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் உறுப்பினராக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தலில் அரிதாங்கு தொகுதியில் போட்டியிட்டு சிக்கிம் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பி.எசு கோலே அமைச்சரவையில் 2019 ஆம் ஆண்டு முதல் முதல் 2022 ஆம் ஆண்டு வரை நகர்ப்புற மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, உணவு மற்றும் குடிமைப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சராக இவர் பணியாற்றியுள்ளார். தற்போது, சிக்கிம் மாநில சட்டப் பேரவையின் சபாநாயகராக உள்ளார். [1] [2] [3] [4]
அருண் குமார் உப்ரீதி Arun Kumar Upreti | |
---|---|
சிக்கிம் சட்டமன்ற சபாநாயகர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 22 அகத்து 2022 | |
தொகுதி | அரிதாங்கு சட்டமன்றத் தொகுதி |
நகர்ப்புற மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, உணவு மற்றும் குடிமைப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர் | |
பதவியில் 2019 – 22 ஆகத்து 2022 | |
தொகுதி | அரிதாங்கு சட்டமன்றத் தொகுதி |
சிக்கிம் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 2019 | |
முன்னையவர் | சியாம் பிரதான் |
பின்னவர் | பதவியுல் |
தொகுதி | அரிதாங்கு சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அருண் குமார் உப்ரீதி |
அரசியல் கட்சி | சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா |
வாழிடம்(s) | கேங்டாக், கிழக்கு சிக்கிம் |
தொழில் | வணிகர் |