அருமணி மருத்துவம்

அருமணி மருத்துவம் (Lapidary medicine) என்பது இரத்தினக் கற்கள் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவான ஒரு போலி அறிவியல் கருத்தாகும். அருமணி மருத்துவம் பற்றிய கொள்கையின் ஆதாரம், அருமணிகளைக் குறித்து காணப்படும் தகவல்களிலிருந்து உருவாகிறது. விலைமதிப்பற்ற மற்றும் அரைகுறையான கற்களின் பண்புகள் மற்றும் நற்பண்புகள் பற்றிய தகவல்களை புத்தகங்கள் வழங்குகின்றன. [1] இந்த அருமணிகள், இத்தகைய அருமணி மருந்துப் பொருட்களின் விற்பனை மற்றும் உற்பத்தி பற்றிய புரிதலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பொதுவான பண்பாட்டு நடைமுறைகள் மற்றும் இரத்தினக் கற்கள் பற்றிய நம்பிக்கைகள் பற்றிய தகவல்களையும் வழங்குகின்றன.

இக்கருத்தின் மிகவும் பொதுவான பயன்பாடானது, நகைகளுக்குள் விலைமதிப்பற்ற கற்களை உட்பொதிப்பதாகும். மூலிகைகள், கற்கள் மற்றும் சில மிருகங்களின் சிறப்பு உறுப்புகளை நேரடியாக தோலில் வைத்திருக்க வேண்டும் அல்லது குறிப்பாக "கைத்தறி துணியில் சுற்றப்பட வேண்டும்" என்றும் சில அறிஞர்கள் அறிவுறுத்துகிறார்கள் [2]

அருமணி மருத்துவக் கோட்பாட்டில் பரவலான நம்பிக்கை இருபத்தியோராம் நூற்றாண்டிற்குள் மறைந்துவிட்டாலும், இக்கோட்பாட்டின் எச்சங்கள் படிக குணப்படுத்துதல் என்ற போலி அறிவியல் கருத்திற்குள் ஊடுருவிக் காணப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Glick, Thomas F. Medieval Science, Technology, and Medicine: An Encyclopedia. Routledge.
  2. Albertus Magnus, The boke of secretes of Albertus Magnus of the vertues of herbes, stones, and certayne beasts : also, a boke of the same author, of the maruaylous thinges of the world, and of certaine effectes caused of certaine beastes, 1560.

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருமணி_மருத்துவம்&oldid=3837354" இலிருந்து மீள்விக்கப்பட்டது