அருமன்

சங்க கால குறுநிலத் தலைவன்

அருமன் என்னும் பெயர் பூண்ட மன்னர்கள் இருவரைச் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.

ஒருவன் சிறுகுடி என்னும் ஊரில் வாழ்ந்த அருமன். இவன் மூதில் அருமன் எனப் போற்றப்படுகிறான்..இவனது ஊர் மக்கள் நல்லஞ்சோற்றில் கருணைக் கிழங்குக் குழம்பை ஊற்றிப் பிணைந்து காக்கைக்கு வைப்பார்களாம். [1]

மற்றொருவன் ஆதி அருமன் எனப் போற்றப்படுகிறான். இந்த அருமனின் தந்தை ஆதி எனத் தெரிகிறது. இவனது ஊர் வழியாகச் செல்பவர்கள் பனங்கள், பனம்பழம் ஆகியவற்றை உண்டு மகிழ்வார்களாம். [2]

அடிக்குறிப்பு

தொகு
  1. கொடுங்கண் காக்கைக் கூர்வாய்ப் பேடை
    நடுங்குசிறைப் பிள்ளை தழீஇக் கிளை பயிர்ந்து
    கருங்கண் கருணைச் செந்நெல் வெண்சோறு
    சூருடைப் பலியொடு கவரிய குறுங்கால்
    கூழுடை நன்மனை குழுவின இருக்கும்
    மூதில் அருமன் பேரிசைச் சிறுகுடி - நக்கீரர் பாடல் - நற்றிணை 367
  2. கள்ளிற் கேளிர் ஆர்த்திய உள்ளூர்ப்
    பாளை தந்த பஞ்சி அம் குறுங்காய்
    ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
    ஆதி அருமன் மூதூர் – கள்ளில் ஆத்திரையனார் பாடல் - குறுந்தொகை 293
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருமன்&oldid=914004" இலிருந்து மீள்விக்கப்பட்டது