அருள் சங்கர்

இந்திய கணிதவியலாளர்

அருள் சங்கர் (Arul Shankar) என்பவர் ஓர் இந்திய கணிதவியலாளர் ஆவார். டொரொண்டோ பல்கலைக்கழகத்தில் இவர் கணிதவியலாளராக, எண் கோட்பாட்டில் நிபுணத்துவம் வாய்ந்தவராகப் பணிபுரிந்தார். மேலும் குறிப்பாகச் சொல்வதென்றால் கணித புள்ளிவிவரங்கள் துறையில் அருள் சங்கர் நிபுணர் என்று கூறலாம்[1]. தன்னுடைய முனைவர் பட்டத்தை இவர் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் மஞ்சுள் பார்கவாவின் தலைமையின் கீழ் படித்து பெற்றார். ஒரு நீள்வட்ட வளைவின் தரச் சராசரியை பார்கவாவுடன் சேர்ந்து உருவாக்கியதற்காக இவர் அறியப்படுகிறார்[2].

2018 ஆம் ஆண்டில் இவருக்கு சுலோவன் ஆராய்ச்சி உறுப்பினர் என்ற விருது வழங்கப்பட்டது[3] கணிதவியலாளர்களுக்கு வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் இதுவும் ஒன்றாகும்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Arul Shankar". Mathematics Genealogy Project. பார்க்கப்பட்ட நாள் 14 May 2017.
  2. M. Bhargava and A. Shankar, Binary quartic forms having bounded invariants, and the boundedness of the average rank of elliptic curves, Annals of Mathematics 181 (2015), 191–242 https://dx.doi.org/10.4007/annals.2015.181.1.3
  3. "2018 Sloan Research Fellows". Alfred P. Sloan Foundation. Archived from the original on 1 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 6 March 2018.
  4. "The Culture of Research and Scholarship in Mathematics: Rates of Publication" (PDF). American Mathematical Society. பார்க்கப்பட்ட நாள் 6 March 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருள்_சங்கர்&oldid=3541760" இலிருந்து மீள்விக்கப்பட்டது