அருள் நமச்சிவாய தேசிகர்

அருள் நமச்சிவாய தேசிகர் உமாபதியாரின் மாணக்கராகவும்,சீடராகவும் விளங்கியவர்.

வாழ்க்கைக் குறிப்பு தொகு

இவர் சீர்காழியில் வளமான குடும்பத்தில் பிறந்தவர்.கடந்தை மறைஞான சம்பந்தரிடம் சாத்திரங்களைக் கற்று அவரையே குருவாக ஏற்றார்.இவரது இயற்பெயர் சாமிநாதன்.தம் வீட்டின் மச்சிலேயே இருந்து தொடர்ந்து தியானம் செய்தமையால்,மச்சுச்செட்டியார் என்றும் மச்சுறைவர் என்றும் வழங்கப்பெற்றார்.இவரின் குருவாகிய மறைஞானசம்பந்தர் இறந்தமையால் உமாபதியை குருவாக ஏற்றார்.உமாபதியார் இவருக்குத் துறவறம் தந்து,நமச்சிவாயர் என்ற திருநாமமும் சூட்டினார்.

இயற்றிய நூல்கள் தொகு

இவர் இயற்றிய நூல்கள் ஞானசாத்திர பஞ்சகம் என்ற பெயரால் வழங்குகிற ஐந்து சிறு சாத்திர நூல்கள்.அவையாவன, 1) ஞான பூசாகரணம் 2) ஞான பூசாவிதி 3) ஞான தீசாவிதி 4) ஞான அந்தியேட்டி 5) போசன விதி இவற்றின் செய்யுட்கள் முறையே 30,18,8,2,4. 1) ஞான பூசாகரணம்- மனிதன் உடல் உள்ளவரையில் ஞானபூசையும்,ஞானசந்தியும் செய்வதன் அவசியம் கூறுவது. 2) ஞான பூசாவிதி- ஞானபூசை செய்வதற்குரிய கிரியை முறைகளைக் கூறும் நூல் 3) ஞான தீசாவிதி- சீடனுக்கு ஞானதீட்சை செய்வதற்கான முறைகளைக் கூறும் நூல். 4) ஞான அந்தியேட்டி- ஞான சமாதிக்கான கிரியைகளைக் சுருக்கிக் கூறுவது. 5) போசன விதி- ஞானி பிச்சை ஏற்கும் விதிகளைக் கூறும் நூல்.

முக்தி தொகு

இவர் சிதம்பரத்தில் மார்கழி மாதத்துத் திருவாதிரை நட்சத்திர நன்னாளில் முக்தி பெற்றார்.

உசாத்துணை தொகு

மு.அருணாசலம்,"தமிழ் இலக்கிய வரலாறு-14 ஆம் நூற்றாண்டு "The PARKAR வெளியீடு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருள்_நமச்சிவாய_தேசிகர்&oldid=2373836" இலிருந்து மீள்விக்கப்பட்டது