அரேனி -1 குகை
அரேனி -1 குகை வளாகம் (Areni-1 cave, ஆர்மீனியம்: Արենիի քարանձավ ) என்பது பலவகையான தொல்லியல் பொருட்களைக் கொண்ட தொல்லியல் தளம் [1], மற்றும் பின் செப்புக் காலத்திய / ஆரம்பகால வெண்கலக் காலத்திய சடங்கு தளம் மற்றும் குடியிருப்பு [2] ஆகும். இது தெற்கு ஆர்மீனியாவின் அரேனி கிராமத்திற்கு அருகில் அர்பா ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது .
அரேனி -1 குகை Արենի-1 քարանձավ | |
---|---|
இருப்பிடம் | வயோட்ஸ் டிஜோர் மாகாணம், ஆர்மீனியா |
பகுதி | லெஸ்சர் காகசஸ் |
ஆயத்தொலைகள் | 39°43′53″N 45°12′13″E / 39.73139°N 45.20361°E |
நீளம் | 40 m (130 அடி)[1] |
வரலாறு | |
கட்டுமானப்பொருள் | சுண்ணாம்புக் கரடு |
காலம் | செப்புக் காலம், வெண்கலக் காலம் |
கண்டுபிடிப்புகள்
தொகு2008 ஆம் ஆண்டில், ஆர்மீனிய முனைவர் பட்டப் படிப்பு மாணவரும், நாட்டின் தொல்லியல் நிறுவனத்தின் தொல்லியல் ஆய்வாளருமான டயானா சர்தாரியன் என்பவர் அந்த இடத்தில் இதுவரை அறியப்பட்டதில் பழமையான தோல் காலணியைக் (ஷு) கண்டுபிடித்தார். 2011 சனவரி 2011 இல், உலகின் மிகப் பழமையான ஒயின் ஆலை இந்தக் குகையில் கண்டுபிடிக்கப்பட்டது.[3] பின்னர், 2011 ஆம் ஆண்டில், கிமு 3,900 ஆண்டுகளுக்கு முந்திய நானல் புல்லாலான பாவாடை கண்டுபிடிக்கப்பட்டது.[4] 2009 ஆம் ஆண்டில், பழமையான மனித மூளைத் திசுவுடன் கூடிய மண்டையோடு கண்டுபிடிக்கப்பட்டது.
மரபியல்
தொகுஅரேனி -1 ("பறவை கண் வடிவ") குகையில் செப்புக்காலத்தில் (சி. 5700-6250 ஆண்டுகள் பிபி ) வாழ்ந்த மூன்று நபர்கள் ஹாப்லாக் குழு எல் 1 ஏ மரபணுவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். ஒரு நபரின் மரபணுவானது அவருக்கு சிவப்பு முடி மற்றும் நீல நிற கண்கள் இருந்ததைக் குறிக்கிறது.
படக்காட்சியகம்
தொகு-
குகையின் வாயில்
-
நுழைவாயிலுக்கான பாதை
-
குகையில் இருந்து பார்வை
-
2012 குகையின் நுழைவாயில் தளம்.
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Archaeology of Food: An Encyclopedia". Google Books. பார்க்கப்பட்ட நாள் April 10, 2017.
- ↑ "Areni-1 Cave, Armenia: A Chalcolithic–Early Bronze Age settlement and ritual site in the southern Caucasus". Research Gate. March 1, 2012. பார்க்கப்பட்ட நாள் April 10, 2017.
- ↑ Owen, James. "Earliest Known Winery Found in Armenian Cave." National Geographic. January 10, 2011. Retrieved January 14, 2011.
- ↑ "5,900-year-old women's skirt discovered in Armenian cave". News Armenia. September 13, 2011. பார்க்கப்பட்ட நாள் September 14, 2011.