அரோல்டு சுபென்சர் ஜோன்சு
சர் அரோல்டு சுபென்ச்ர் ஜோன்சு (Sir Harold Spencer Jones) [1] (29 மார்ச்சு 1890 கென்சிங்டன், இலண்டன்- 3 நவம்பர் 1960)[2] ஓர் ஆங்கிலேய வானியலாளரும் பிரித்தானியப் பேரரசு ஆணை பெற்றவரும் அரசு கழக ஆய்வுறுப்பினரும் ஆவார்.[3][4][5][6] இவர் இருப்புசார் வானியலில் சிறந்த தன்னிகரில்லாத அறிஞர். இவர் அரசு வானியலாளராக 23 ஆண்டுகள் இருந்தார். [4]
சர் அரோல்டு சுபென்சர் ஜோன்சு | |
---|---|
பிறப்பு | 1890|03|29|df=y கென்சிங்டன், இலண்டன், இங்கிலாந்து |
இறப்பு | 1960|11|3|df=y |
குடியுரிமை | ஐக்கிய நாடுகள் |
தேசியம் | ஆங்கிலேயர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | அரசு வான்காணகம், கிரீன்விச் அரசு வான்காணகம், நன்னம்பிக்கைமுனை |
கல்வி கற்ற இடங்கள் | இலத்மேர் உயர்நிலைப் பள்ளி, ஏம்மர்சுமித், இலண்டன் இயேசு கல்லூரி, கேம்பிரிட்ஜ் |
அறியப்படுவது | அரசு வானியலாளர் |
இளம்பருவம்
தொகுஅரோல்டு சுபென்சர் ஜோன்சு இலண்டனில் உள்ல கென்சிங்டனில் 1890 மார்ச்சு 29 இல் பிறந்தார். இவர் தந்தையார் ஒரு கணக்காயர்; இவர் தாயார் ஒரு பள்ளி ஆசிரியர். இவர் மேற்கு இலண்டனில் உள்ள ஏம்மர்சுமித் இலதிமேர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இங்கு இவர் கேம்பிரிட்ஜ் இயேசு கல்லூரியில் படிப்பதற்கான கல்விநல்கையைப் பெற்றுள்ளார். இவர் அங்கு 1911 இல் பட்டம் பெற்றார். முதுபட்டம் படிக்கவும் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அக்கல்லூரியின் ஆய்வுறுப்பினராகவும் ஆனார்.[3][7]
கிரீன்விச் அரசு வான்காணகத் தலைமை உதவியாளர், 1913-1923
தொகுஆர்த்தர் எடிங்டன் பதவிநீங்கியதும் 1913 இல் இவர் கிரீன்விச் அரசு வான்காணகத் தலைமை உதவியாளராக அமர்த்தப்பட்டார். அதன்வழி, கேம்பிரிட்ஜின் புளூமிய வானியல் பேராசிரியர் ஆனார்.
இவரது வானியல் பணிகள் பலபுலங்களில் விரிவுற்றதுரிவர்ஐருப்புசார் வானியலில் வல்லவரானார்; குறிப்பாக புவிக்கோள இயக்கத்தையும் திசைப்போக்கையும் கணிப்பதில் சிறந்த புலமை பெற்றார். இவர் விண்மீன்களின் இயக்கங்களையும் ஆய்வு செய்தார். இவர் 1914 இல் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள மின்சுகிக்கு 1914, ஆகத்து21 இல் ஏற்படவிருந்த முழுச் சூரிய ஒளிமறைப்பை ஆய போரிலாத அமைதிக் காலத்தில் சென்றார்; பிறகு முதல் உலகப்போர் தொடங்கியதும் தாயகம் மீண்டார்.[8]
இவரது வான்காணகப் பணிகள் போரால் தடுக்கப்பட்டது; போரின்போது, இவர் படைக்கல அமைச்சகத்தில் ஒளிக்கருவிநுட்பத்தில் பணியாற்றினார்.[3]
இவர் 1918 இல் கிளாடிசு மேரி ஓவர்சுவை மணந்தார்.[3] போருக்குப் பிறகு இவர் வானியல் பணிகளைத் தொடர்ந்தார்; விண்மீன்களின் இருப்புகளையும் பொலிவுகளையும் புவிக்கோளச் சுழற்சியையும் ஆய்வு செய்தார்ரிக்காலத்தில் இவர் பொது வானியல் எனும் பாட நூலை எழுதினார்.[9] இவர் 1922 இல் செப்டம்பர் 21 இல் நிகழவிருந்த முழுச்சூரிய ஒளிமறைப்பை நோக்க, கிறித்துமசு தீவுக்குச் சென்றார்.அவரது நோக்கம் சூரியன் விண்மீனகளின் ஒளியை விலக்குவதை அளந்து அய்ன்சுட்டைனின் சார்பியல் கோட்பாட்டை நிறுவ ம்யல்வதே ஆகும். இவர் இம்முயற்சியை 1919 இல் நிகந்த முச்சூரிய ஒளிமறைப்பிலும் ஏற்கெனவே மேற்கொண்டுள்ளார். ஆனால், இவரது இம்முயற்சிகள் தோலி கண்டன.[3]
நன்னம்பிக்கைமுனை வானியலாளர், 1923-1933
தொகுநன்னம்பிக்கைமுனை அரசு வான்காணகபொறுப்பாளராக இருந்த சிடுனி அவுகு 1923 இல் இறந்தார். இவருக்குப் பிறகு அங்கே சுபென்சர் நன்னம்பிக்கைமுனை அரசு வான்காணகத்துக்குப் பொறுப்பாளராக பணியமர்த்தப்பட்டார் இவர்ரும் இவரது துணைவியாரும் தென் ஆப்பிரிக்காவுக்குக் கப்பலில் 1923 திசம்பரில் சென்றடைந்தனர்.[3] அந்த வான்காணகத்தில் இருந்த ஒன்பது ஆண்டுகளில் சுபென்சர் அதன் ஆட்சிமுறையையும் அறிவியல் செயல்பாட்டையும் புதுப்பித்தார். இவர் வான்காணகப்பணிச் சூழலையும் நடத்தைச் சூழலையும் மேம்படுத்தினார். வான்காணகத்தில் முன்பே தொலைநோக்கியால் எடுத்திருந்த ஒளிப்படத் தட்டுகளில் இருந்த ஏராளமான விண்மீன்களின் இயல்புகளைப் பணியாளர்களைக் கொண்டு அளக்கவைத்தார். இப்பணியில் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வுசெய்த விண்மீன்களின் இருப்புகளை அளத்தல், அவற்றில் இருந்து விண்மீன்களின் சர்யான இயக்கங்களையும் (வானின் குறுக்கே நெடுந்தொலைவு விண்மீகளோடு ஒப்பிட்ட அவற்றின் சிற்றியக்கங்களயும் அளத்தல் ஆகியன் அடங்கின. விண்மீன்களின் விரைவுகள்(திசைவேகங்கள்) காட்சித் தொடுகோட்டில், விண்மீன்களின் கதிர்நிரல்களில் இருந்து அளக்கப்பட்டன. பணியாளர்கள் ஒளிப்படப் படிமங்களில் இருந்து 40,000 விண்மீன்களின் பொலிவுகளை அளந்தனர்ரவர்கள் இடமாறு தோற்றபிழைகளில் இருந்து விண்மீன்களின் தொலைவுகளையும் சூரியனைப் புவி சுற்றிவரும்போது விண்மீன்களின் இருப்பில் அமையும் மிகச்சிறு ஆண்டுத்தோற்ற இயக்கங்களையும் அளந்தனர. இந்த முடிவுகள் பின்னர் விண்மீன் அட்டவணைகைல் வெளியிடப்பட்டன.[3]
சுபென்சரின் சொந்த ஆராய்ச்சி புவி, நிலா இயக்கங்களில் அமைந்தது. இவர் விண்மீன்களின் ஒளிமறைப்பு நோக்கீடுகளைப் பயன்படுத்தி நிலாவின் வட்டணையை சீராக்கினார். இவர் புவியில் இருந்து செவ்வாய் இருப்புகளை அதன் இடமாறு தோற்றப்பிழைவழி நோக்கீடுகள் செய்து சூரியனுக்கும் புவிக்கும் இடையில் அமையும் தொலைவை மேம்படுத்தினார். சிறுகோள் 433 ஈரோசு 1930 இலும் 1931 இலும் புவிக்கு அருகில் வந்தபோது தொடர்ந்து ஈரொசுக்கான நொக்கிடுகலை செய்தார். இந்த ஈரோசு நோக்கீடுகள் மிகச் சிறந்த சூரியத் தொலைவை ஈட்டித் தந்தன. இவருக்கு இந்தப் பணிக்காக அரசு வானியல் கழகப் பொற்பதக்கமும் அரசு கழகப் பதக்கமும் பின்னர் தரபட்டுள்ளன.[3]
அரசு வானியலாளர், 1933-1955
தொகுஇவர் 1933 இல் சர் பிராங்கு டைசனுக்குப் பிறகு அரசு வானியலாளராகப் பணியேற்றார். பிறகு பிரித்தானியவுக்கு வந்து கிரீன்விச் அரசு வான்காணகப் பொறுப்பை ஏற்றார்.
இவர் ஆட்சிப் பொறுப்பேற்று புதிய பணியாளர்களை பணியமர்த்தியதோடு புதிய கருவிகளையும் கொள்முதல் செய்தார். இவர் வான்காணக நேரச் சேவைகளை மேம்படுத்தினார். இவரெச் எம் நாவாய் வழிகாட்டி அலுவலகப் பொறுப்பையும் ஏற்றார்டீவர் அரசு வான்கானகத்தை இலண்டனுக்கு அருகில் இருந்தமையால் ஒளிமாசுற்ற கிரீன்விச் நகரில் இருந்து இலண்டனுக்கப்பால் நெடுந்தொலைவில் அமைந்த இருப்பிடத்துக்கு மாற்ற அரசின் ஒப்புதலைப் பெற்றார்.[3]
இவருக்குத் தன் சொந்த அறிவியல் ஆராய்ச்சியை மேர்கொள்ளவும் நேரம் கிடைத்தது. இவர் தென் ஆப்பிரிக்காவில் தனெடுத்த ஈரோசு நோக்கீடுகளை ஆய்வு செய்து வெளியிட்டார். இவர் புவிச் சுழற்சியையும் கோள்களின் இயக்கங்களையும் துல்லியமாக அளவீடுகள் செய்வதில் கணிசமான பங்களிப்புகள் செய்தார்.[3]
இரண்டாம் போருக்குப் பிறகு வான்காணகப் பணியாளர்கள் வேலைக்குத் திரும்பிவந்ததும் சில கருவிகளும் வாங்கப்பட்டதும் கிரீன்விச்சில் முனைப்பான அறிவியல் செயல்பாடுகள் தொடங்கின . என்றாலும், இதற்குள் அரசு சுசெக்சில் உள்ள எர்சுட்மோன்சியூக்சுக் கோட்டைக்கு வான்காணகத்தை மாற்ற ஒப்பந்தம் உருவாக்கியது. அதற்காக ஒரு புதிய இடமும் வாங்கப்பட்டது. சுபென்சர் 1948 இல் கிரீன்விச்சில் இருந்து எர்சுட்மோன்சியூக்சுக்கு நகர்ந்தார். அங்கே புதிர கட்டிடங்கள் கட்டவும் போரால் நிதிநல்கை அரசிடமிருந்து பெறமுடியாததாலும் கிரீன்விச்சில் கலைக்கப்பட்ட நிறுவனம் மீளச் செயல்பாட்டுக்கு வர பத்தாண்டுகள் கழிந்தன. சுசெக்க்ஷு புதிய இருப்பில் அமைந்த வானகாணகம் அரசு கிரீன்விச் வான்காணகமென வழங்கலாகியது. கிரீன்விச்சில் இருந்து இடம்பெயர்த்தப்பட்ட கருவிகளை நிறுவ, பல புதிய பாரியக் கட்டிடக் கட்டுமானத் திட்டங்க வழிநடத்தினார்.[3]
இவர் எர்சுட்மோன்சியூக்சில் ஒரு பெரிய தொலைநோக்கியை நிறுவலுக்கான திட்டமிடலில் முதன்மையான பங்கேர்றார். இத்திட்டவழி 1967 இல் அய்சக் நியூட்டன் தொலைநோக்கி திறந்து வைக்கப்பட்டது.
இவரது பேரார்வம் ஓரையியலிலும் கணியவியலிலும் அமைந்திருந்தது. இவர் பிரித்தானிய ஓரையியல் கழகத் தலைவராக 1938 முதல் 1960 வரை அதாவது அவரது இறப்புவரை இருந்தார்.[1]
இவர் 1945 முதல் 1948 வரை பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் தல்லைவராக இருந்தார். இவர் அரசு வானியல் கழகத்தின் தலைவராக 1937 முதல் 1939 வரை இருந்தார். இவர் அரசு வானியல் கழகத்தில் முன்பே செயலாளராகவும் பொருளாளராகவும் அயல்ந்ட்டுச் செயலாளராகவும் இருந்துள்ளார்.[1][3]
இவர் 1943 இல் மாவீரர்(நைட்) பட்டம் பெற்றார். இவருக்குப் பிரித்தானியப் பேரரசின்மிகச் சிறந்த ஆணையான நைட் கட்டளையாளர் விருது 1955 இல் வழங்கப்பட்டது.[1]
ஓய்வும் பிற்கால வாழ்வும்
தொகுஇவர் அரசு வானியலாளர் பதவியில் இருந்து 1955 இறுதியில் பணிவிடை பெற்றார். இவர் பல அறிவியல் அமைப்புகளில் தொடர்ந்து முனைப்பாகப் பணியாற்றிவந்தார். இவர் தன் 70 ஆம் அகவையில் 1960, நவம்பர், 3 இல் இறந்தார்.[3]
விண்வெளிப் பயணம் குறித்த கருத்துகள்
தொகுசுபென்சருக்குப் பிறகு, இரிச்சர்டு வூல்லி அரசு வானியலாளராகப் பதவியேற்றார். இவர் 1956 இல் பதவியேற்றதுமே, ஓர் அச்சூடகக் கேள்விக்குப் பதிலிறுக்கையில் "விண்வெளிப் பயணம் பயனற்றதெனக்" கூறியதாக தவறாக அடிக்கடி குறிப்பிடப்படுகிறது.[10] மேலும் இதேபோல, சுபென்சருக்கும் விண்வெளிப் பயணத்தினை நடைமுறைப்படுத்துவதில் நம்பிக்கை இல்லையெனவும் கூறப்படுவதுண்டு, இவர் 1957 அக்தோபர் மாதத்தில் சுபுட்னிக் விண்கலம் ஏவுவதற்கு இருவாரங்களுக்க் முன்பு, " விண்வெளிப் பயணம் பொருளற்றது எனக் கூரிஉள்ளார். என்றாலும், இவர் இத்தகைய கூற்றேதும் வெளியிடவில்லை அண்மையில் கருத்துரைக்கப்படுகிறது;[11][12][13]
ஆயினும், இவரது கூற்றுக்கான மேற்கோள் ஒன்று, அவர் வாணாலிலேயே, 1959 செப்டம்பர், 17 புதிய அறிவியலாளர் எனும் இதழில் (பக்கம் 476) சுட்டப்பட்டுள்ளது. இந்த உணர்வுநிலைக்கு ஒத்துவருவதுபோல, சுபென்சர் ஜோன்சு 1957 அக்தோபர், 10 ஆம் நாளைய புதிய அறிவிய்லாளர் இதழில் பின்வருமாறு கூறுவதைக் காணலாம்:
நிலாவுக்கு நாம் செலவதற்கு இன்னும் பல தலைமுறைகள் செல்லவேண்டும்; அப்படி நாம் செல்வதில் வெற்றி கண்டாலும், திரும்ப புவிக்கு மீள்வதில் வெற்றிகாணும் வாய்ப்புக்கு இடமிருக்காது என நான் கருதுகிறேன். நிலாவுக்கு அப்பால் செல்வதைப் பற்றிக் கிஞ்சித்தும் நினத்து பார்க்கமுடியவில்லை; தப்பித் தவறி விண்கலம் பிழைபட ஏவப்பட்டால் தன் இலக்கு மாறும்போது வேண்டுமானால் நேரலாம். அப்போது உறுதியாக விண்கலம் மீளப் புவிக்குத் திரும்புவது என்பதே இயலாமற் போகும்.
தகைமைகளும் விருதுகளும்
தொகுவிருதுகள்
தொகு- அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1943)
- அரசு பதக்கம் (1943)
- புரூசு பதக்கம் (1949)
- பிரித்தானிய ஒரையியல் நிறுவனப் பொற்பதக்கம் (1946)
இவரது பெயர் இடப்பட்டவை
தொகு- நிலாவில் உள்ள சுபென்சர் ஜோன்சு குழிப்பள்ளம்
- செவ்வாயில் உள்ல ஜோன்சு குழிப்பள்ளம்
- குறுங்கோள் 3282 சுபென்சர் ஜோன்சு
விரிவுரைகள்
தொகுசுபென்சர் ஜோன்சு 1944 இல் அன்றாட வாழ்வில் வானியல் எனும் தலைப்பில் அரசு நிறுவனக் கிறித்துமசு விரிவுரைகள் ஆற்ற அழைக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Richard van der Riet Woolley (1961). "Harold Spencer Jones. 1890-1960". Biographical Memoirs of Fellows of the Royal Society 7: 136–126. doi:10.1098/rsbm.1961.0011.
- ↑ GRO Register of Births: JUN 1890 1a 111 KENSINGTON - Harold Spencer Jones (forenames = Harold Spencer, surname = Jones)
- ↑ 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 Sadler, D. (1963). "Obituary, Harold Spencer Jones". Quarterly Journal of the Royal Astronomical Society 4 (1): 113–125. Bibcode: 1963QJRAS...4..113..
- ↑ 4.0 4.1 Smart, W. M. (June 1961). "Sir Harold Spencer Jones, 1890–1960". Journal of the Royal Astronomical Society of Canada 55 (3): 117. Bibcode: 1961JRASC..55..117S. https://archive.org/details/sim_journal-of-the-royal-astronomical-society-of-canada_1961-06_55_3/page/117.
- ↑ "Obituary, Sir Harold Spencer Jones". Monthly Notes of the Astronomical Society of Southern Africa 19 (11): 146–149. 30 November 1960. Bibcode: 1960MNSSA..19..146..
- ↑ "Sir Harold Spencer Jones, K.B.E.". The Observatory 76: 15–16. February 1956. Bibcode: 1956Obs....76...15J.
- ↑ Woolley, R. V. D. R. (1961). "Harold Spencer Jones". Biographical Memoirs of Fellows of the Royal Society 7: 136–145. doi:10.1098/rsbm.1961.0011.
- ↑ Jones, H. S.; Davidson, C. R. (1915). "Total Eclipse of the Sun, 1914 August 21, Preliminary Account of the Observations Made at Minsk, Russia". Monthly Notices of the Royal Astronomical Society 75 (3): 125–134. doi:10.1093/mnras/75.3.125. Bibcode: 1915MNRAS..75..125S.
- ↑ Jones, H. S. (1922). General Astronomy (1st ed.). London: Edward Arnold. Bibcode:1922geas.book.....S.
- ↑ Morgan, C. and Langford D.: Facts and Fallacies, Webb & Bower, 1981
- ↑ Davenhall, C. (2008). "Bunk and Bilge". Society for the History of Astronomy Newsletter 17: 43–44. Bibcode: 2008SHAN...17R..43D.
- ↑ Jones, R. (2009). "Bunk and Bilge". Society for the History of Astronomy Bulletin 18: 36. Bibcode: 2009SHAN...18...36J.
- ↑ Griffin, R. (2009). "Bunk and Bilge". Society for the History of Astronomy Bulletin 19: 47. Bibcode: 2009SHAN...19...46G.
மேலும் படிக்க
தொகு- Sadler, Donald Harry (2004), "Jones, Sir Harold Spencer", Oxford Dictionary of National Biography, Oxford: Oxford University Press
- Snedegar, Keith (2007), "Spencer Jones, Harold", in Hockey, Thomas; Trimble, Virginia; Williams, Thomas R.; Bracher, Katherine; Jarrell, Richard A.; Marche, Jordan D.; Ragep, F. Jamil; Palmeri, JoAnn; Bolt, Marvin (eds.), Biographical Encyclopedia of Astronomers, vol. 2, New York: Springer, pp. 1075–1076, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-35133-9
- Sadler, Donald (1963). "Obituary, Harold Spencer Jones". Quarterly Journal of the Royal Astronomical Society 4 (1): 113–125. Bibcode: 1963QJRAS...4..113..
- Smart, W.M. (June 1961). "Sir Harold Spencer Jones, 1890–1960". Journal of the Royal Astronomical Society of Canada 55 (3): 117. Bibcode: 1961JRASC..55..117S. https://archive.org/details/sim_journal-of-the-royal-astronomical-society-of-canada_1961-06_55_3/page/117.
- "Obituary, Sir Harold Spencer Jones". Monthly Notes of the Astronomical Society of Southern Africa 19 (11): 146–149. 30 November 1960. Bibcode: 1960MNSSA..19..146..
- Tenn, Joseph S. (2013). "Harold Spencer Jones". Department of Physics and Astronomy, Sonoma State University. பார்க்கப்பட்ட நாள் 28 February 2014.