அர்கா புனித் மாம்பழம்

அர்கா புனித் இரக மாம்பழம் அல்போன்சா மற்றும் பங்கனப்பள்ளி இரங்களின் கலப்பு ஒட்டு இரக மாம்பழ வகையாகும். இது மிதமான வீரியம் கொண்ட மரம் ஆகும். ஆண்டுதோரும் சீரான விளைச்சல் தரக்கூடியது. இது நடுப்பருவ இரகம் ஆகும். இதன் பழங்கள் நல்ல இருப்புத்தன்மைக் கொண்டதாகவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய இரகமாகவும் உள்ளது. அல்போன்சாவைப் போல கெட்டியான ஆரஞ்சு நிற சதைப்பற்றும், இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையும் நல்ல மணமும் உடையது.

அர்கா புனித் மாம்பழங்கள்

உசாத்துணை

தொகு

ஆறாவது அகில இந்திய மாங்கனி விழா மலர்,கிருட்டிணகிரி,தர்ம்புரி மாவட்டத்திற்கேற்ற மா இரகங்கள். கட்டுரை.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்கா_புனித்_மாம்பழம்&oldid=2040080" இலிருந்து மீள்விக்கப்பட்டது